கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன். இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. பதவியேற்ற முதல் நாளே ஜோ பைடன் அமெரிக்காவின் முக்கிய சட்டங்களில் கையெழுத்திட்டார். ஜோ பைடனின் அதிவிரைவான நிர்வாக நடவடிக்கைகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் முதல்குடிமகள் மற்றும் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் தற்போது ஒரு சம்பவத்தின் மூலமாக வைரலாகி வருகிறார்.
![]()
|
சில நாட்களுக்கு முன்னர் ஜோ பைடன் அமெரிக்க எலக்டோரல் காலேஜால் அதிகாரபூர்வமாக அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி புகுந்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை காப்பதில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினர் முக்கிய பங்கு வகித்தனர்.
தலைநகர் வாஷிங்டன் மற்றும் வெள்ளை மாளிகையை காப்பதில் இவர்களது பங்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் 24 மணிநேரமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபருக்கு பாதுகாப்பாக உடன் இருப்பர். அவர்களது உயிருக்கு பாதுகாப்பாக இவர்கள் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்ய நேரிடலாம்.
ஜோ பைடனின் மறைந்த மகன் இந்த பாதுகாப்பு படையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே பைடன் இவர்கள்மீது எப்போதும் நன்மதிப்பு வைத்திருப்பார். 24 மணி நேரம் பணி செய்யும் இந்த பாதுகாப்புப் படையினர் வெள்ளை மாளிகை அருகே தங்கும் இடத்தில் அவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லாமல் போனதாக முன்னதாக டிவிட்டர் வலைதளத்தில் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
![]()
|
இதனை அடுத்து இது அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அரசு அவர்களுக்காக கழிப்பிடங்கள், செல்போன் சார்ஜ் செய்ய சாக்கெட்டுகள், தங்குமிடங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தது. இன்று அமெரிக்க பாதுகாப்புப் படையினரை ஜில் பைடன் சந்தித்து அவர்களுக்கு இனிப்பு குகீஸ் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இச்சம்பவம் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement