பாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த பாதுகாப்பு படை

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்தது எல்லை பாதுகாப்பு படை.பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக வருவதற்கு வசதியாக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.கடந்த ஆறு மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது சுரங்கப்பாதை இது என்றும்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்தது எல்லை பாதுகாப்பு படை.பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக வருவதற்கு வசதியாக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.



latest tamil news



கடந்த ஆறு மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது சுரங்கப்பாதை இது என்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி வர இந்த சுரங்கப்பாதைகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மேலும், சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் உணவு மற்றும் ஆயுதங்களைப் பாகிஸ்தான் போட்டுச் செல்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


latest tamil news



இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.எஸ் ஜாம்வால் கூறுகையில், "சுமார் 150 முதல் 175 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையைச் சர்வதேச எல்லையில் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சுமார் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 2 முதல் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது.இந்த சுரங்கப்பாதை 6 ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
24-ஜன-202111:59:30 IST Report Abuse
தமிழன் பாகிஸ்தான விடுங்க, நம்ம இந்தியா கிட்டே ஒரு மணி நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. இப்போ சீனாவை பத்தி பேசுவோம். போர் போர் வெற்றி வெற்றி ( 24ம் புலிகேசி நம்ம 56")
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
24-ஜன-202108:36:32 IST Report Abuse
Balasubramanian Ramanathan மேஜர் ஜெனரல் ஆப்பு நாதன் மட்டும் ஒய்வு பெறாமல் இருந்திருந்தால் இப்படிநடந்திருக்காது என சொல்லி கும்பிடறேன் சாமி.
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
24-ஜன-202107:47:25 IST Report Abuse
Muguntharajan நம் எல்லைக்குள் இவ்வளவு பெரிய சுரங்கம் தோண்டுற வரைக்கும் நம் ராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது? இத்தனை ஆண்டுகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை? எல்லை பாதுகாப்பில் பெரிய ஓட்டை. பாதுகாப்பு சரியில்லை. இதை தடுக்க நவீன தொழில்நுட்பம் வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X