தடுப்பூசியில் முன்னணி!

Added : ஜன 23, 2021
Share
Advertisement
தடுப்பூசியில் முன்னணி!நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்துகள், அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. உலக அளவில், தடுப்பூசி தயாரிப்பில், இந்தியா முன்னணியில் உள்ளது; இது, பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டம் நிறைவேறியுள்ளதை காட்டுகிறது.பிரகாஷ் ஜாவடேகர்மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பா.ஜ., எந்த அவசரமும் இல்லை!மஹாராஷ்டிராவில், காங்கிரஸ், சிவசேனா மற்றும்
 தடுப்பூசியில் முன்னணி!

தடுப்பூசியில் முன்னணி!

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்துகள், அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. உலக அளவில், தடுப்பூசி தயாரிப்பில், இந்தியா முன்னணியில் உள்ளது; இது, பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டம் நிறைவேறியுள்ளதை காட்டுகிறது.

பிரகாஷ் ஜாவடேகர்

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பா.ஜ.,

எந்த அவசரமும் இல்லை!

மஹாராஷ்டிராவில், காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, ஆட்சி நடத்துகின்றன. முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து செயல்படுகிறோம்; மாநில முதல்வராக வேண்டும் என, எனக்கு எந்த அவசரமும், ஆசையும் இல்லை.

அசோக் சவான்

மஹா., பொதுப்பணித் துறை அமைச்சர், காங்.,

உத்வேகம் வேண்டும்!

சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். நேதாஜியின் வாழ்க்கையில் இருந்து உத்வேகம் பெற்று, புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணிகளில், இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X