ஜன., 24, 1924
கர்நாடக மாநிலம், விராஜ்பேட்டையில், 1924 ஜன., 24ம் தேதி பிறந்தவர், கோனேரி பெல்லியப்பா முத்தம்மா என்ற சி.பி.முத்தம்மா.சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லுாரி மற்றும் பிரசிடென்சி கல்லுாரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்ற, நாட்டின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.நாட்டின் முதல் பெண் வெளியுறவு அதிகாரியாக, 1949ல் பணியில் சேர்ந்தார். இந்திய ஆட்சிப் பணியில், பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்ற, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வெற்றி பெற்றார்.நெதர்லாந்து, மியான்மர், இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள, இந்திய துாதரக உயர் பொறுப்புகளில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் இவர் தான். டில்லியில் இருந்த தன், 15 ஏக்கர் நிலத்தை, ஆதரவற்றோர் இல்லம் கட்ட, அன்னை தெரசாவுக்கு வழங்கினார். 2009 அக்., 14ம் தேதி, தன், 85வது வயதில் காலமானார்.
சி.பி.முத்தம்மா பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE