-சென்னை:தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட, 197 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.பள்ளி கல்வித் துறைக்காக, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக, தட்டச்சர் பணியிடங்களுக்கு, 197 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, பணி நியமன ஆணைகளை, நேற்று முன்தினம், சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி., வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள், பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE