அரசியல் செய்தி

தமிழ்நாடு

யானை எரிப்பு கமல் வேதனை

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'மக்களை எதிர்கொள்ள, தமிழக அரசு அஞ்சுகிறது' என, கமல் கூறியுள்ளார்.காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், வீட்டில் ஓய்வில் உள்ளார்.'டுவிட்டரில்' அவர் கூறியுள்ளதாவது:கிராம சபை கூட்டங்கள்நடத்துவது தொடர்பாக, மக்கள் நீதி மையம் தொடர்ந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை என, தமிழக

சென்னை:'மக்களை எதிர்கொள்ள, தமிழக அரசு அஞ்சுகிறது' என, கமல் கூறியுள்ளார்.

காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், வீட்டில் ஓய்வில் உள்ளார்.'டுவிட்டரில்' அவர் கூறியுள்ளதாவது:கிராம சபை கூட்டங்கள்நடத்துவது தொடர்பாக, மக்கள் நீதி மையம் தொடர்ந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை என, தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள, அவர்கள் அஞ்சுகின்றனர் என்பதையே காட்டுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மற்றொரு, டுவிட்டர் பதிவில், கமல் கூறியுள்ளதாவது:காடுகளை அழித்து, நாடுகள் ஆக்கினோம். காட்டு உயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது; பின்வாங்கிப் போகும் யானையை கொளுத்துவது காட்டுமிராண்டித்தனமா? மரணத்தை சுமந்து போன யானையின் ஓலம் அலைக்கழிக்கிறது. காலம் தலைகுனிகிறது. நீதியை நிலைநாட்ட, மக்கள் நீதி மையம் தொடர்ந்து போராடும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-ஜன-202122:53:47 IST Report Abuse
Vijay D Ratnam அந்த யானை தீயிட்டு கொளுத்தப்பட்டு துடிக்க துடிக்க கதறியபடி ஓடிய அந்த கட்சி நெஞ்சை பதறவைத்துவிட்டது. அடக்கம் செய்த அந்த வனக்காவலர் குமுறி அழுத்த காட்சி மனதை உலுக்கியது. காடு உருவாக யானை காரணமாம். யானையால் நாளொன்றுக்கு 300 முதல் 500 மரங்கள் உருவாகிறது. ஒரு யானை தனது வாழ்நாளில் சுமார் பதினெட்டு லட்சம் மரங்கள் வரை உருவாக்கி வளர காரணமாக உள்ளதாம். ஒரு காட்டையே தீயிட்டு கொளுத்தி இருக்கிறார்கள் பாவிகள். இத்தனைக்கும் அந்த ரிசார்ட் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாம். இப்போது அந்த ரிஸார்ட்டை சீல் வைத்து இருக்கிறார்கள். அது நம் இடத்துக்கு வரவில்லை. நாம்தான் அதன் இடத்துக்கு போய் அதை அழிக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X