சென்னை:பாதயாத்திரையாக பழநி செல்லும் பக்தர்கள், தரிசன டிக்கெட் பெற, சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா, வரும், 28ம் தேதி நடக்கிறது. பக்தர்கள், www.tnhrce.gov.in என்ற, வலைதளத்தில் முன்பதிவு செய்து, தரிசன டிக்கெட் பதிவிறக்கம் செய்து, சுவாமியை தரிசிக்கலாம்.
'ஆன்-லைன்' வழியாக முன்பதிவு செய்ய முடியாத பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக, திண்டுக்கல் - -பழநி சாலையில் உள்ள ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோவில். தாராபுரம் - -பழநி சாலையில் உள்ள தாசநாயக்கன்படி, காவடி மண்டபம்; உடுமலை- - பழநி சாலையில், சின்னக்கலையம்புத்துார்; பழநி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி ஆகிய இடங்களில், முன்பதிவு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், அந்தந்த முன்பதிவு மையங்களில், கட்டணமில்லா தரிசன டிக்கெட் பெற்று, சுவாமி தரிசனம் செய்யலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE