கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மியூச்சுவல் பண்ட்' மோசடி டி.ஜி.பி., பதிலளிக்க உத்தரவு

Added : ஜன 23, 2021
Share
Advertisement
சென்னை:'மியூச்சுவல் பண்ட்' மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க, எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி., பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் தாக்கல் செய்த மனு:அமெரிக்காவைச் சேர்ந்த, 'பிராங்க்ளின் டெம்பில்டன் அசட் மேனேஜ்மென்ட்' எனும் நிதி நிறுவனம்,

சென்னை:'மியூச்சுவல் பண்ட்' மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க, எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி., பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் தாக்கல் செய்த மனு:அமெரிக்காவைச் சேர்ந்த, 'பிராங்க்ளின் டெம்பில்டன் அசட் மேனேஜ்மென்ட்' எனும் நிதி நிறுவனம், இந்தியாவில், 'மியூச்சுவல் பண்ட்' எனும் பரஸ்பர நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுதும், லட்சக்கணக்கான மக்கள், இந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், ஆறு மியூச்சுவல் பண்ட் திட்டங்களை முடித்துக் கொண்டதாக, 2020 ஏப்ரலில், அந்த நிறுவனம் அறிவித்தது.இதன் வாயிலாக, நாடு முழுதும், 3 லட்சத்து, 15 ஆயிரத்து, 621 முதலீட்டாளர்களிடம் இருந்து, 28 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது.

இது தொடர்பாக அளித்த புகாரில், பொருளாதார குற்றப் பிரிவினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.'மியூச்சுவல் பண்ட் சரியானது' என, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி ஆகியோர், விளம்பர பிரதிநிதிகளாக நடித்து வருகின்றனர். இது, மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது. இந்த வழக்கில், முறையான விசாரணை நடத்தாவிட்டால், பணம் திரும்ப கிடைக்காது.

இந்த விசாரணையை, உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.பொருளாதார குற்றப் பிரிவு துவங்கியது முதல், எத்தனை வழக்குகள் பதியப்பட்டன; எத்தனை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன என, அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். முதலீட்டாளர்களின் நலன் காக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்தும், முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய, பொருளாதார குற்றப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, ஆறு வாரங்களில் பதிலளிக்குமாறு, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் பொருளாதார குற்றப் பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X