
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:ஒரு மாணவன் படிப்பில் சிறந்தவன் என நிருபிக்க தேர்வு எழுத வேண்டும். அதில், அதிக மதிப்பெண் எடுக்கும் போது திறமைகள் தெரிய வரும். அதுபோல அ.தி.மு.க., ஆட்சி சிறந்த ஆட்சி என நிருபிக்க வரும் சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். ஸ்டாலின் கனவு பலிக்காது.
பொள்ளாச்சி எம்.எல்.ஏ., மீது தேவையில்லாத தவறான குற்றச்சாட்டுகளை கூறி தி.மு.க., ஆதாயம் தேட பார்க்கிறது. பொள்ளாச்சி மண், புனிதமான மண்; இந்த மண்ணுக்கு என பெருமை உள்ளது.தவறான செய்தியை பரப்பி ஆதாயம் தேடுவதை தி.மு.க., நிறுத்திக்கொள்ள வேண்டும். தி.மு.க.,விடம் இருந்துதான் பெண்களை பாதுகாக்க வேண்டும்.
பெண்களுக்கு அரணாக இருப்பதுடன், தெய்வாக மதிக்கும் கட்சி அ.தி.மு.க., தான். கோவை மாவட்டம் பெண்கள் பாதுகாப்புக்கு சிறந்த நகரம் என உள்ளது. அதில் தான் பொள்ளாச்சியும் உள்ளது.தில் இருந்தால் நேரடியாக மோத வேண்டும். கொப்பரை விலை உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து நிறைவேற்றினோம். மேலும், பிரதமரிடம், 150 ரூபாய் விலை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.
ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த கேரளா முதல்வரை சந்தித்து பேச்சு நடத்தினேன். தற்போது, உயர்மட்ட குழு அமைத்து, இரண்டு மாநில அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை விவசாயம் நிறைந்த பொள்ளாச்சியில் விவசாயிகள் பயன்பெற நீராபானம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தால் குளம், குட்டைகள் துார்வாரப்பட்டு நீர் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, உடுமலை தொகுதிகளில் மக்களின் எண்ணங்களை புரிந்து அதற்கேற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.வரும் தேர்தலில் வெற்றி பெற வைத்தால் மக்களின் எண்ணங்களை புரிந்து திட்டங்களை அறிவிப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE