கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் ஆட்டோக்கள் விவகாரம் நிரந்தர தீர்வுக்கு ஐகோர்ட் பரிந்துரை

Added : ஜன 23, 2021
Share
Advertisement
மதுரை:'விதிமீறல் ஆட்டோக்கள் விவகாரம், நிரந்தர தீர்வு காண வேண்டிய பெரிய பிரச்னை. இது தொடர்பாக, மற்றொரு தகுந்த வழக்கில் ஆராயப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையில், ஆட்டோக்களில் விதிகளை மீறி, இருக்கைகளை மாற்றம் செய்கின்றனர். மூன்று பயணியரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும்.ஆனால், பல

மதுரை:'விதிமீறல் ஆட்டோக்கள் விவகாரம், நிரந்தர தீர்வு காண வேண்டிய பெரிய பிரச்னை. இது தொடர்பாக, மற்றொரு தகுந்த வழக்கில் ஆராயப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையில், ஆட்டோக்களில் விதிகளை மீறி, இருக்கைகளை மாற்றம் செய்கின்றனர். மூன்று பயணியரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும்.ஆனால், பல ஆட்டோக்களில் விதிகளை மீறி, 12 பேரை அனுமதிக்கின்றனர். இதனால் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரையில், 2019 வரை, 126 ஆட்டோக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5,017 ஆட்டோக்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 4 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், ஆட்டோக்களில் விதிமீறல் தொடர்கிறது.போக்குவரத்து விதிகளை மீறி, அதிக பயணியரை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை செயலர், கமிஷனர், மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு உத்தரவு:விதிமீறல் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, உரிமத்தை சஸ்பெண்ட் அல்லது ரத்து செய்ய, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு, போக்குவரத்து துறை கமிஷனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.இது, நிரந்தர தீர்வு காண வேண்டிய பெரிய பிரச்னை. இது தொடர்பாக, மற்றொரு தகுந்த வழக்கில் ஆராயப்படும்; இவ்வழக்கை முடிக்கிறோம்.இவ்வாறு, நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X