ஆஞ்சநேயர் படத்தை பதிவிட்டு மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நியூயார்க்:கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்பியதற்காக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோ, ஆஞ்சநேயர் படத்தை பதிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில் நாட்டில், 87 லட்சம் பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளனர்; 2.14 லட்சம் பேர் இறந்துள்ளனர்.20 லட்சம், 'டோஸ்'உலகில், அமெரிக்காவிற்கு அடுத்ததாக, பிரேசிலில் தான்
 ஆஞ்சநேயர் படத்தை பதிவிட்டு மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

நியூயார்க்:கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்பியதற்காக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோ, ஆஞ்சநேயர் படத்தை பதிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில் நாட்டில், 87 லட்சம் பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளனர்; 2.14 லட்சம் பேர் இறந்துள்ளனர்.


20 லட்சம், 'டோஸ்'

உலகில், அமெரிக்காவிற்கு அடுத்ததாக, பிரேசிலில் தான் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில், சீரம் நிறுவனத்தின், 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தின், 20 லட்சம், 'டோஸ்', மத்திய அரசு சார்பில் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோ, ஆஞ்சநேயர் படத்துடன், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான டுவிட்டரில், பிரேசில் அதிபர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு நமஸ்காரம். உலகளாவிய பிரச்னையில் இருந்து மீள, இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளதற்கு, பிரேசில் பெருமை அடைகிறது.


'சஞ்சீவி' மூலிகைச் செடி

இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்து, உதவியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார். ராமாயணத்தில், ராமரின் தம்பி லட்சுமணன், போரில் காயமடைந்து மூர்ச்சையாகி விழுகிறார். உடனே, ஆஞ்சநேயர், உயிர் காக்கும், 'சஞ்சீவி' மூலிகைச் செடி உள்ள கோவர்த்தன மலையை அடியோடு பெயர்த்தெடுத்து வந்து, லட்சுமணன் உயிரைக் காப்பாற்றுகிறார்.

அதுபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் மக்களை காப்பாற்ற, ஆஞ்சநேயர் போல, பிரதமர் மோடி உதவியுள்ளதை குறிக்கும் வகையில், போல்சனோரோ, ஆஞ்சநேயர் படத்தை, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


அமெரிக்கா பாராட்டு

இந்தியா, 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்தை, வங்கதேசம், நேபாளம், மியான்மர், மொரீஷியஸ், பூடான், மாலத் தீவு ஆகிய நாடுகளுக்கு, இலவசமாக அனுப்பியுள்ளது. பிரேசில், மொராக்கோ, தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு, வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது. இதற்கு, 'இந்தியா, தன் தடுப்பூசி மருந்தை பல நாடுகளுக்கு வழங்கி, சர்வதேச சமுதாயத்தைக் காக்கும் உண்மையான நண்பனாக விளங்குகிறது' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளது. ''தொற்றை தடுப்பதில் உலக நாடுகளுக்கு உதவி வரும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. நாம் இணைந்து செயல்பட்டால். தொற்றை ஒழித்து, பல உயிர்களை காப்பாற்ற முடியும்,'' என, இந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-ஜன-202112:34:51 IST Report Abuse
Loganathan Kuttuva கொரோனா பரவியது சீனாவில் இருந்து .அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி இந்தியாவில் இருந்து .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X