பொது செய்தி

இந்தியா

சசிகலாவின் உறவினர் இளவரசிக்கும் தொற்று

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருடன் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இளவரசிக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, நேற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சுத்திணறல்சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது
 சசிகலாவின் உறவினர் இளவரசிக்கும் தொற்று

பெங்களூரு:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருடன் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இளவரசிக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, நேற்று உறுதி செய்யப்பட்டது.


மூச்சுத்திணறல்



சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.மூன்று நாட்களுக்கு முன், சிறையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில், கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதுஉறுதியானது. இதையடுத்து, கொரோனா சிகிச்சை வார்டுக்கு சசிகலா மாற்றப்பட்டார். தொடர்ந்து, அவசர பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், நேற்றைய நிலவரப்படி, சசிகலாவின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


சிகிச்சை

இதற்கிடையில், சசிகலா வுடன், சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இளவரசிக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கும் தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதனால், சிறையில் இருந்த அவரையும், விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம், சிறை அதிகாரிகள் நேற்று அழைத்து வந்தனர். இளவரசிக்கும், கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜன-202102:23:47 IST Report Abuse
தமிழவேல் இவங்களுக்கு யாரு இதை குடுத்தாங்கன்னு தெரியலியே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X