அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு கட்டடங்கள் முதல்வர் பழனிசாமி., திறப்பு

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 23, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும், பல்வேறு துறைகளின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.சட்டத் துறை சார்பில், காட்பாடி காந்தி நகரில் உள்ள, வேலுார் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில், 4.27 கோடி ரூபாய் செலவில், மாணவியர் விடுதி கட்டப்பட்டு உள்ளது. உயர் கல்வித் துறை சார்பில், சென்னை பல்கலை வளாகத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில்,

சென்னை:தமிழகம் முழுதும், பல்வேறு துறைகளின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.

சட்டத் துறை சார்பில், காட்பாடி காந்தி நகரில் உள்ள, வேலுார் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில், 4.27 கோடி ரூபாய் செலவில், மாணவியர் விடுதி கட்டப்பட்டு உள்ளது. உயர் கல்வித் துறை சார்பில், சென்னை பல்கலை வளாகத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு, எம்.ஜி.ஆரின் பங்களிப்பை ஆராயும், முதல் உயர் கல்வி நிறுவன ஆராய்ச்சி மையமாக, இந்த மையம் திகழும். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுகள், பொது நிர்வாகம், திரைப்படத் துறை போன்றவற்றில், அவரது பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாக, இம்மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு, திண்டுக்கல், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில், 63.84 கோடி ரூபாய் மதிப்பில்,காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறை சார்பில், பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, 3.60 கோடி ரூபாயில், அலுவலக கட்டடம்; கோவை மாவட்டம், சூலுாரில், 1.40 கோடி ரூபாயில், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும்,தலைமைச் செயலகத்தில்,முதல்வர் பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயகுமார், அன்பழகன், கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பங்கேற்றனர்.


அடிக்கல்!



புதிதாக உருவாக்கப்பட்ட, செங்கல்பட்டு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்களில், 48.3 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட காவல் அலுவலக கட்டடங்கள், புதிதாக கட்டப்பட உள்ளன. இவற்றுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அடிக்கல் நாட்டினார்.


நுால் வெளியீடு



தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலை சார்பில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், ஒருங்கே தயாரிக்கப்பட்ட, 'இசை மற்றும் கவின் கலைகளின் வளர்ச்சி ஒரு வரலாற்றுப் பார்வை' என்ற நுாலை, முதல்வர் புழனிசாமி., வெளியிட்டார்.இந்நுால், தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த, பண்டைய கலைகளான, இசை, ஆடல், ஓவியம், சிற்பம் ஆகியவை குருகுலங்களில்போதிக்கப்பட்டு, பின் படிப்படியாக பள்ளிகள், கல்லுாரிகள் ஆகியவற்றில் கற்பிக்கப்பட்டு, தற்போது பல்கலையாக உயர்ந்து நிற்கும்வரலாற்றையும், சாதனைகளையும் விளக்குகிறது.

இந்நுாலை, ஆங்கிலத்தில், தென்னிந்திய இசை தொடர்பான நுால்களை எழுதிய ஸ்ரீராம்; தமிழாக்கத்தை, பல்கலை துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தியும் எழுதி உள்ளனர். நுால் வெளியீடு நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X