சென்னை:'வடக்கு மாவட்டங்களில், காலை நேரங்களில் காணப்படும் பனி மூட்டம், அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், இன்று லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். வட மாவட்டங்களில், காலை நேரங்களில் காணப்படும் பனி மூட்டம், அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும்.
இன்று முதல், 27ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையில், வானம் மேக மூட்டமாக காணப்படும். காலை நேரங்களில், வானம் பனி சூழ்ந்து காணப்படும். அதிகபட்சம், 32; குறைந்தபட்சம், 23 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கோவை விமான நிலையத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE