பொது செய்தி

இந்தியா

கவர்னர் மாளிகை பாதுகாப்பு 2 அடுக்காக குறைப்பு

Added : ஜன 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி: கவர்னர் மாளிகை சுற்றி இரண்டு அடுக்கு பாதுகாப்பு தொடர்கிறது.புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, காங்., கூட்டணி கட்சிகள் முற்றுகை போராட்டம் அறிவித்தது. அதனால் கவர்னர் மாளிகை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.காங்., கட்சி இடத்தை மாற்றி, 3 நாட்கள் போராட்டம் நடத்தி முடித்து விட்டது.

புதுச்சேரி: கவர்னர் மாளிகை சுற்றி இரண்டு அடுக்கு பாதுகாப்பு தொடர்கிறது.புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, காங்., கூட்டணி கட்சிகள் முற்றுகை போராட்டம் அறிவித்தது. அதனால் கவர்னர் மாளிகை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.காங்., கட்சி இடத்தை மாற்றி, 3 நாட்கள் போராட்டம் நடத்தி முடித்து விட்டது. ஆனால், கவர்னர் மாளிகை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகள் அகற்றவில்லை.முதல்வர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை கூட்டம் நடந்தது. அதில், பொது மக்களுக்கு இடையூறாக அமைத்த தடுப்பு கட்டைகளை அகற்ற வேண்டும். ரோமண்ட் ரோலண்ட் நுாலகம், அரசு மருத்துவமனை, மணக்குள விநாயகர் கோவில், ஆசிரமம் வரும் மக்களுக்கு இடையூறு இருக்க கூடாது. தடுப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, கவர்னர் மாளிகை சுற்றி அமைக்கப்பட்ட 3 அடுக்கு பாதுகாப்பில், தலைமை செயலகம் பாண்லே அருகில் அமைத்திருந்த தடுப்பு, பாரதி பூங்கா பக்கவாட்டு சாலை வெடிகுண்டு செயலிழிப்பு போலீஸ் நிலையம் அருகில் அமைத்திருந்த தடுப்பு, ரங்கப்பிள்ளை வீதி செஞ்சி சாலை சந்திப்பு, செஞ்சி சாலை மணக்குள விநாயகர் கோவில் சந்திப்பு, மரைன் வீதி உள்ளிட்ட 9 இடங்களில் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் இருந்த தடுப்புகள் அகற்றி, பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், கவர்னர் மாளிகையை சுற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் 2 அடுக்கு பாதுகாப்பு மீண்டும் தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X