பொது செய்தி

இந்தியா

ரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : இந்த மாதத்தில் மட்டும், இதுவரை, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 44 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் இதுவரை, 1.9 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு மார்ச், 24ம் தேதியிலிருந்து, இதுவரையிலான காலத்தில், பங்குச் சந்தை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், மும்பை பங்குச்


புதுடில்லி : இந்த மாதத்தில் மட்டும், இதுவரை, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 44 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் இதுவரை, 1.9 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.



latest tamil news



கடந்த ஆண்டு மார்ச், 24ம் தேதியிலிருந்து, இதுவரையிலான காலத்தில், பங்குச் சந்தை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், மும்பை பங்குச் சந்தை, 20 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், அதன் குறியீட்டு எண் சென்செக்ஸ், 50 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இந்த காலகட்டத்தில், 44 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை பெற்றிருக்கிறார்கள்.பொருளாதார தரவுகள் மேம்பட்டு வருவது, கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது, தடுப்பூசி அறிமுகம் ஆகியிருப்பது ஆகியவை காரணமாக, பிற நாடுகளிலிருந்து அதிகளவில் முதலீடுகள் வந்துள்ளன.


latest tamil news




எதிர்பார்ப்பை மீறி, அதிக லாபம் தரத் தக்கவையாக இந்திய பங்குச் சந்தைகள் இருப்பதால், அன்னிய முதலீடுகள் அதிகம் வருகின்றன.வளர்ந்துவரும் நாடுகளில், இந்திய சந்தைகளே அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையில் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
24-ஜன-202117:28:16 IST Report Abuse
vnatarajan தங்கம் மற்றும் கச்சா என்னை விலை ஏறு முகத்தில் இருப்பதால் தற்போது உள்ள ஸ்டாக் மார்க்கெட் வளர்ச்சியின் ஸ்திரத்தன்மையை இனிமேல் எதிர் பார்க்கமுடியாது
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202112:04:23 IST Report Abuse
Tamilan இந்த 44 லச்சம் கோடியில் 1 லச்சம் கோடியை பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க உதவினால் சீனாவின் பாதி பரப்பளவை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202112:02:14 IST Report Abuse
Tamilan திட்டமிட்டு கொள்ளையடிப்பதற்காகவே , உலகமுழுவதிலுமுள்ள பங்கு சந்தைகளில் உள்ள குண்டர்கள் சீன போன்ற வீட்டோ உள்ளவர்கள், மற்ற மதவாத பழைமைவாத நாடுகளின் துணையுடன் திட்டமிட்டு பரப்பியதுதான் கொரோனா . இவர்களை எந்த ஒரு அரசியல் சட்ட அரசுகளும் அடையாளம் காண முன்வராதது இவர்களுக்கு அரசு, அரசியல் அமைப்புகளில் உள்ள செல்வாக்குதான் காரணம் . தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே இவர்களின் எடுபிடியாக வேலை செயகின்றன .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X