பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.150 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அறநிலைய துறை அதிகாரிகள் அதிரடி

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியில், அறநிலையத் துறை அதிரடியாக களம் இறங்கி உள்ளது. இதற்கு சான்றாக, சென்னையின் பிரதான பகுதியில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்ட் நிலம், அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து, 488 கோவில்கள், 56 மடங்கள், திருமடத்துடன் இணைந்த, 58 கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு
 ரூ.150 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அறநிலைய துறை அதிகாரிகள் அதிரடி

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியில், அறநிலையத் துறை அதிரடியாக களம் இறங்கி உள்ளது. இதற்கு சான்றாக, சென்னையின் பிரதான பகுதியில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்ட் நிலம், அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து, 488 கோவில்கள், 56 மடங்கள், திருமடத்துடன் இணைந்த, 58 கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, நன்செய், புன்செய், மானாவாரி என, 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள்; 33 ஆயிரத்து, 665 கடைகள், வாடகைக்கு விடப்பட்டுள்ளன.


பல ஆயிரம் கோடி ரூபாய்

மேலும், 1 லட்சத்து, 23 ஆயிரத்து, 729 பேருக்கு, விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, ஆண்டுக்கு, 58.68 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என கூறப்படுகிறது. பல கோவில்களின் சொத்து விபரங்கள் சரியானபடி பராமரிக்கப்படவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, விரோதிகள் சிலர், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பது, போலி பட்டா தயாரித்து விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இதையடுத்து, கோவில் சொத்துக்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, இணையதளத்தில் வெளியிடுமாறு, அறநிலையத் துறைக்கு, அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், அனைத்து கோவில்களின் சொத்து பட்டியல் முழுமையாக, இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. சென்னை, புறநகரில் உள்ள கோவில்களின் சொத்துக்கள் மட்டும் கணிசமாக உள்ளன. அவற்றின் மதிப்பு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

அதில் பெருமளவு, குத்தகை எடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்தந்த கோவில்களுக்கு சேர வேண்டிய வருமானம் கிடைக்காமல் உள்ளது.அது போன்ற ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியை, அறநிலையத் துறை தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கு சான்றாக, 2020 நவ., மாதம், சென்னை, சவுக்கார்பேட்டை, சிவன், பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 9 கோடி ரூபாய் மதிப்பிலான இடம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப் பட்டது. அடுத்ததாக, டிச., மாதம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சாந்தோம் பழண்டியம்மன் கோவில்களுக்கு சொந்தமான, 66.79 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம், அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது.


15 கிரவுண்ட் இடம்சென்னை இணை கமிஷனர் ஹரிபிரியா கூறியதாவது:சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 15 கிரவுண்ட் இடம், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ளது.

30 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்திருந்தனர். அந்த இடத்திற்கான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தபோது, கோவிலுக்கு சொந்தமான இடம் என்பது ஊர்ஜிதமானது. அடுத்த கட்டமாக, அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தப்பட்டது. பின், ஆக்கிரமிப்பை, ஒரு மாதத்திற்குள் அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை வாயிலாக, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வந்தாலும், சென்னையின் பிரதான பகுதியில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, ஹரிபிரியா கூறினார்.

- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜன-202108:15:54 IST Report Abuse
Bhaskaran முதலில் இம்மாதிரி ஆக்கிரமிப்புக்கு துணை போன அறக்கொள்ளைத்துரை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தணும் avinga ஓய்வுபெற்றிருந்தாலும் அல்லது இயற்கை எய்தியிருந்தாலும் சொத்துக்களை பறிமுதல் பண்ணவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X