சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளை போன ரூ.10 கோடி நகை மீட்பு: 7 பேர் கைது

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஓசூர் : ஓசூரில், முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து, துப்பாக்கி முனையில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த, ஏழு பேர் கும்பலை, தெலுங்கானா மாநில போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள் மற்றும் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாகலுார் சாலையில், தங்க நகைகளை
கொள்ளை , நகை மீட்பு,வடமாநில கொள்ளையர்கள், கைது

ஓசூர் : ஓசூரில், முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து, துப்பாக்கி முனையில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த, ஏழு பேர் கும்பலை, தெலுங்கானா மாநில போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள் மற்றும் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாகலுார் சாலையில், தங்க நகைகளை அடகு வைக்கும் தனியார் நிறுவனமான முத்துாட் பைனான்ஸ் இயங்கி வருகிறது. பொதுமக்கள் அடகு வைத்திருந்த நகைகள், லாக்கரில் வைக்கப்பட்டிருந்தன.


ஒசூர், பாகலூர் சாலையில் செயல்படும் முத்தூட் பைனான்ஸில் நேற்று நடந்த நகை கொள்ளை தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. நிறுவனத்தில் நுழையும் கொள்ளையர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, இன்சுலேஷன் டேப்பால் கட்டிப்போடுகின்றனர். மேலாளரை தாக்கி சாவியை பறித்து, லாக்கரில் இருந்த நகைகள், பணத்தை பைகளில் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர். 'சிங்கம்' படத்தின் கிளைமாக்ஸில், வில்லன் கன்டெய்னர் லாரிக்குள் மறைந்திருந்து தப்பி செல்ல முயற்சிப்பார். அவரது செல்போன் சிக்னலை டிராக் செய்து, போலீஸ் சூர்யா மடக்கி பிடிப்பார். இந்த பரபரப்பு பட காட்சியை போல, முத்தூட் நிறுவன நகை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை, 24 மணிநேரத்தில் கைது செய்து இருக்கிறார்கள் போலீசார். கொள்ளையர்களை பிடிக்க, 10 தனிப்படை அமைக்கப்பட்டது. தப்பியோடிய கொள்ளையர்கள் நிறுவன மேலாளரின் செல்போனையும் பறித்து சென்றது தெரிந்தது. அதன் சிக்னலை போலீசார் Track ட்ராக் செய்தனர். தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் அருகே மேலாளரின் செல்போன், ஒரு புதருக்குள் வீசப்பட்டு கிடந்தது. அதிலிருந்து யாருக்கேனும் கொள்ளையர்கள் பேசி இருக்கிறார்களா? என்று ஆராய்ந்தனர். புதிதாக இரண்டு எண்களுக்கு கால் செய்யப்பட்டு இருந்தது. அந்த எண்களின் செல்போன் சிக்னல்களை போலீசார் ட்ராக் செய்தனர். இரண்டு சிக்னல்களும் ஒன்றாக, ஆந்திரா வழியாக நகர்ந்து கொண்டிருந்தது. கொள்ளையர்களுடன் தொடர்புடையவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கலாம். செல்போன் சிக்னலை போலீசார் பின்தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் அந்த சிக்னலை போலீசார் நெருங்கியபோது, அவர்கள் ஹைதராபாத்தை அடைந்திருந்தார்கள். அப்போதும் அந்த சிக்னல் நகர்ந்து கொண்டிருந்தது. போலீசாரின் வாகனத்திற்கு முன்னால் ஒரு கண்டெய்னர் லாரி தான் சென்று கொண்டிருந்தது. அதிலிருந்துதான் சிக்னல் வருகிறது என்பதை புரிந்து கொண்டனர். கண்டெய்னர் லாரியை மடக்கினர். லாரியில் சோதனையிட்டபோது, முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்கள் உட்பட 7 பேர் இருந்தனர். அவர்கள் கைது செய்து செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையடித்த 20 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன. 7 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனத்தெரிகிறது. அந்த செல்போன் சிக்னல்கள் கொள்ளையர்களின் கூட்டாளிகளுடையது. சைபராபாத் போலீசாரின் உதவியுடன் இந்த ஆபரேஷன் சக்சஸ் ஆகியிருக்கிறது. அவர்களின் கஸ்டடியில் இருக்கும் கொள்ளையர்களை தமிழக போலீசார் விசாரணைக்கு அழைத்து வருவார்கள் எனத்தெரிகிறது.

சி.சி.டி.வி. கேமிராநேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு நிறுவனம் திறக்கப்பட்டபோது, வாடிக்கையாளர் போல் சென்ற ஆறு பேர் கும்பல், துப்பாக்கிகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி, நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களை கட்டிப்போடு தாக்கினர். பின், ஊழியர்களிடம் இருந்த சாவியை எடுத்து, லாக்கரில் இருந்த, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 25 கிலோ, 91 கிராம் நகைகள் மற்றும், 93 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து பைக்கில் தப்பினர். இச்சம்பவங்கள், அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவானது.

ஹட்கோ போலீசார் விசாரித்தனர். கொள்ளை கும்பல், நகைகளை எடுத்துச் செல்லும் போது, நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள் வைத்திருந்த மொபைல் போன்களையும் பறித்து சென்றனர். அந்த போன் டவரை வைத்து, போலீசார், 'டிராக்' செய்தபோது, கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி - ஆனைக்கல் இடையேயுள்ள கர்ப்பூரா பகுதியில் சிக்னல் காட்டியது.
போலீசார் அங்கு சென்று தேடியபோது, சாலையோரம் இருந்த முட்புதரில், நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசராகவாவுக்கு சொந்தமான மொபைல் போன் மற்றும் கொள்ளை கும்பல் பயன்படுத்திய கையுறைகள் கண்டெடுக்கப்பட்டன.

கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளுடன், ஜி.பி.எஸ்., டிராக்கிங் கருவி இருந்ததால், கொள்ளை கும்பல் எங்கு செல்கிறது என, போலீசார் கண்காணித்தனர். அத்திப்பள்ளி - ஆனைக்கல் சாலையில், குறிப்பிட்ட இடத்தில், சிறிது நேரம், சிக்னல் ஒரே இடத்தில் இருந்தது.
அப்பகுதியில் நின்ற கன்டெய்னர் லாரியில், கொள்ளையடித்த நகைகளை போட்டு விட்டு, லாரியில் இரு கொள்ளையர்களும், காரில் நான்கு பேரும் தப்பியது தெரிந்தது. ஜி.பி.எஸ்., கருவி உதவியுடன், லாரி மற்றும் காரை, தமிழக போலீசார் பின் தொடர்ந்தனர்.அவை, தெலுங்கானா மாநிலத்துக்குள் நுழைவதை அறிந்து, சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாருக்கு, கிருஷ்ணகிரி எஸ்.பி., பண்டிகங்காதர் தகவல் தெரிவித்தார்.

ஷம்ஷாபாத் டோல்கேட் அருகே, லாரி மற்றும் காரை போலீசார் மடக்கினர். மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ரூப்சிங் பாகல், 22, அவரது அண்ணன் ஷங்கர் சிங்பாகல், 36, பவன்குமார் விஸ்கர்மா, 22, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மன்ஜி, 24, விவேக் மண்டல், 32, உத்தரபிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் தேக்குராம், 55 கிளீனர் ராஜீவ்குமார், 35 ஆகிய, ஏழு பேரை கைது செய்தனர்.


பறிமுதல்மத்திய பிரதேச மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, அமித் என்பவரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து, ஏழு கைத்துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள், கன்டெய்னர் லாரி, டாடா சுமோ கார், கத்தி, 13 மொபைல் போன்கள் மற்றும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை சம்பவம் நடந்த, 18 மணி நேரத்தில், சைபராபாத் போலீசார் உதவியுடன், தமிழக போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.


பஞ்சாப்பில் கைவரிசைதலைமறைவாக உள்ள அமித் மற்றும் கைதான ரூப்சிங் பாகல், ஷங்கர்சிங் பாகல் மற்றும் மூவர் கடந்தாண்டு, அக்.,ல் பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டனர். இதில், மூவர் கைதான நிலையில், ரூப்சிங் பாகல், ஷங்கர்சிங் பாகல், அமித் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். தற்போது, அமித் தவிர மற்ற இருவரும் சிக்கியுள்ளனர்.


சதித்திட்டம் தீட்டியது எப்படி?பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் நடந்த கொள்ளையில் தலைமறைவான பின், மாணவர் ரூப்சிங் பாகல், அமித் ஆகியோர், ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள, மூன்று மாதங்களுக்கு முன், பெங்களூரு வந்தனர். அங்கு, வாடகை அறையில் தங்கிய அவர்கள், நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்.

அதனால், ஓசூர் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடிக்க, அங்கிருந்தவாறு சதித்திட்டம் தீட்டினர். ஆயுதங்களை சேகரித்த பின், தன் அண்ணன் ஷங்கர்சிங் பாகலை, ரூப்சிங் அழைத்துள்ளார். அதேபோல், தனக்கு பழக்கமான விவேக் மண்டலை, அமித் அழைத்தார். சம்பவத்திற்கு, 15 நாட்களுக்கு முன், ஷங்கர்சிங் பாகல் மற்றும் பவன்குமார் விஸ்கர்மா ஆகியோர், அமித்துடன் தங்கி சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர்.


திசை திருப்ப முயற்சிகொள்ளை கும்பலுக்கு, மொபைல் போன் மூலமாக, போலீசார் தங்களை டிராக் செய்ய வாய்ப்புள்ளது என தெரியும். அதனால் தான், முத்துாட் மேலாளர் சீனிவாசராகவாவுக்கு சொந்தமான மொபைல் போனை எடுத்துச் சென்று, அத்திப்பள்ளி - ஆனைக்கல் சாலையில் வீசியுள்ளனர்.

டவர் சிக்னலை வைத்து, போலீசார் அங்கு வருவர். அங்கு சோதனை செய்யும் நேரத்தில், அவர்களை திசை திருப்பி, தப்பிச்செல்ல, கும்பல் திட்டமிட்டிருந்தது.

கொள்ளை அடித்த நகைகளை எடுத்துச் சென்ற லாரியில், தெலுங்கானா மாநில போலீசார் சோதனை செய்தபோது, லாரியிலிருந்த ரகசிய அறையில், கொள்ளையர்கள் பதுங்கியிருப்பது தெரிந்தது. பெங்களூரில் இருந்து ஐதராபாத் செல்லும் வழியில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே, அதிகாலை, 4:00 மணிக்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.


முதல்வர் பாராட்டுதமிழக முதல்வர் இ.பி.எஸ்., தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தமிழ்நாடு காவல் துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். ஓசூரில் இயங்கி வரும் முத்துாட் நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் திருட்டு போன, 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும், 18 மணி நேரத்தில் பிடித்த, தமிழக காவல் துறையினருக்கு, குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

***

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veerappan Sivaprakasam - Nagapattinam,ஓமன்
25-ஜன-202108:44:19 IST Report Abuse
Veerappan Sivaprakasam Tamil nadu and people are robered by CBI raid from central and people money are roberring with their people (north Indians). Still goverment under Bjb for tamilnadu. If Bjb come on power everyday roberring continue and murders start in daily basis. For this case enter any north indian inour state need to fix Gprs in their body and tracking is nessary to avoid this problem. It Is happenned in lost 10 years many crimes.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
24-ஜன-202114:48:33 IST Report Abuse
N Annamalai காவல்துறை விரைவில் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்ததை பாராட்டுகிறேன் .உண்மையில் இது வைர கல் தான் .வைரங்களுக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
venkat - tuticorin,இந்தியா
24-ஜன-202114:15:37 IST Report Abuse
venkat Well done TN police. But what about our stolen 30 puns of jewels in TUTICOIRN . We are from a middle class family surviving with and old couples and my two daughters. My husban alos in abroad, working in a cheating company, who has held over two years. So, DIG of polic TN, please take a sudden action on the theft happened in my home and let us get back. PLease try to prove law and order is common for all. PLease pay the priority in tracing such cases as you are giving priority to the rich people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X