தேனீக்களிடம் இருந்து தப்பிக்க கால்வாயில் குதித்த 3 பேர் உயிரிழப்பு

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஹாசன்: திருமணத்துக்கு எடுக்கப்படும், 'பிரி வெட்டிங் போட்டோ ஷுட்'க்காக சென்றவர்கள், தேனீக்களிடமிருந்து தப்பிக்க கால்வாயில் குதித்ததில், மூவர் இறந்தனர். திருமண ஜோடியினரை, ஆடு மேய்த்து கொண்டிருந்தோர் காப்பாற்றினர்.ஹுப்பள்ளியை சேர்ந்த, திருமண ஜோடி உட்பட ஐந்து பேர், 'திருமணத்துக்கு முன் போட்டோ' எடுக்கல கிரிசுர் பாலம் அருகில், நேற்று முன்தினம் சென்றனர்.அவர்கள்,
 தேனீக்களிடம் இருந்து தப்பிக்க கால்வாயில் குதித்த 3 பேர் உயிரிழப்பு

ஹாசன்: திருமணத்துக்கு எடுக்கப்படும், 'பிரி வெட்டிங் போட்டோ ஷுட்'க்காக சென்றவர்கள், தேனீக்களிடமிருந்து தப்பிக்க கால்வாயில் குதித்ததில், மூவர் இறந்தனர். திருமண ஜோடியினரை, ஆடு மேய்த்து கொண்டிருந்தோர் காப்பாற்றினர்.ஹுப்பள்ளியை சேர்ந்த, திருமண ஜோடி உட்பட ஐந்து பேர், 'திருமணத்துக்கு முன் போட்டோ' எடுக்கல கிரிசுர் பாலம் அருகில், நேற்று முன்தினம் சென்றனர்.அவர்கள், 'செல்பி' எடுத்து கொண்டிருந்தபோது, திடீரென தேனீக்கள் படை, தாக்கியது. இதிலிருந்து தப்பிக்க, ஐந்து பேரும் கால்வாயில் குதித்தனர். இவர்களின் கூச்சலை கேட்ட, அருகில் ஆடு மேய்து கொண்டிருந்தவர்கள், திருமண ஜோடியை காப்பாற்றினர்.மற்ற மூவர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சன்னி ஜான்சன், ராஜசேகர் உடல், பசபுர் கால்வாய் கேட் அருகில் கரை ஒதுங்கியது. மேலும் ஒருவரின் உடலை, தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
29-ஜன-202113:15:54 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ அக்கால பெரும்பாலான திருமணங்கள் சாதாரணமாக பல வீடுகளிலேயே கூட ஆடம்பரம் இன்றி நடந்தன, மிக சில பணக்கார திருமணங்கள் மட்டும் ஆடம்பரமாக நடந்தன, ஆனால் இப்போது திருமணம் அதற்கு முன் பின் என நண்பர்கள் போட்டோகிரபர்கள் ரிசப்சன் எண்ட்ரி இத்தியாதி இத்தியாதி விதவிதமான பேத்தல்கள் அதிகரித்துவிட்டன, இத்தனையும் செய்துவிட்டு அடுத்தவருடமே குடும்பநல கோர்ட் வாசலில் பலர் நிற்ப்பதுதான் பரிதாபம், இந்த ட்ராமாக்கள் முடிந்தபிறகு வரும் யதார்த்த வாழ்வை எதிர்கொள்ள இயல்வதில்லை இவர்களால், டிராமாக்கள் இல்லை இயல்பான நீண்டநாள் வாழ்வுதான் உண்மையான வெற்றிகரமான தாம்பத்தியம் என்பதை இன்றைய இளையதலைமுறை என்று புரிந்துகொள்ளப்போகிறதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X