தந்தை மதிப்பு பாழானதேமகன் நிகில் வேதனை

Added : ஜன 23, 2021
Share
Advertisement
மைசூரு: ''கூட்டணி ஆட்சியால், குமாரசாமியின் மதிப்பு பாழானது. தற்போதைய அரசியல் முறையை பார்த்தால், பயம் ஏற்படுகிறது,'' என ம.ஜ.த., மாநில இளைஞரணி தலைவர் நிகில் தெரிவித்தார்.மைசூரு மாவட்டம், கே.ஆர்.நகரில் நேற்று நடந்த ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான நிகில் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:தற்போது பணம்

மைசூரு: ''கூட்டணி ஆட்சியால், குமாரசாமியின் மதிப்பு பாழானது. தற்போதைய அரசியல் முறையை பார்த்தால், பயம் ஏற்படுகிறது,'' என ம.ஜ.த., மாநில இளைஞரணி தலைவர் நிகில் தெரிவித்தார்.

மைசூரு மாவட்டம், கே.ஆர்.நகரில் நேற்று நடந்த ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான நிகில் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:தற்போது பணம் பலத்தில் தேர்தல் நடக்கிறது. இந்த செயல், அதிக நாட்கள் நீடிக்காது. கே.ஆர்.நகரில் நடந்த இடைத்தேர்தலில், பணம் விளையாடியது.நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. கடந்த கூட்டணி ஆட்சியின் போது, முதல்வராக இருந்த குமாரசாமி கைகளை, காங்கிரஸ் கட்டி போட்டது.இதனால் தனக்கு ஏற்பட்ட மனவேதனையை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார். கூட்டணி ஆட்சியால் தான் அவரது மதிப்பு பாழானது.தற்போதைய அரசியல் முறையை பார்த்தால், பயம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X