பொது செய்தி

இந்தியா

பாழடைந்த சாலை: பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வர் டோஸ்

Added : ஜன 23, 2021
Share
Advertisement
பாகல்கோட்டை: பாழடைந்த சாலையை பார்த்து கோபமடைந்த துணை முதல்வர் கோவிந்த கார்ஜோள், நடுரோட்டில் காரை நிறுத்தி, பொதுப்பணி துறை அதிகாரிகளை வரழைத்து கண்டித்தார். உடனடியாக சாலை சீரமைக்கும் பணி துவங்கியது.பாகல்கோட்டை மாவட்டம், ஜம்கண்டி தாலுகா, சிக்கலக்கி கிராமத்திலுள்ள, அரசு உயர் நிலைப்பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள்,

பாகல்கோட்டை: பாழடைந்த சாலையை பார்த்து கோபமடைந்த துணை முதல்வர் கோவிந்த கார்ஜோள், நடுரோட்டில் காரை நிறுத்தி, பொதுப்பணி துறை அதிகாரிகளை வரழைத்து கண்டித்தார். உடனடியாக சாலை சீரமைக்கும் பணி துவங்கியது.பாகல்கோட்டை மாவட்டம், ஜம்கண்டி தாலுகா, சிக்கலக்கி கிராமத்திலுள்ள, அரசு உயர் நிலைப்பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள், தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் சென்ற சாலை, மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அவ்வழியாக வரும் வாகனங்கள், சிரமப்பட்டு செல்வதை பார்த்தனர்.இதனால், கோபமடைந்த துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள், நடு ரோட்டில் காரை நிறுத்தி, பொதுப்பணி துறை அதிகாரிகளை வரவழைத்தார்.அங்கு வந்த, ஜம்கண்டி மண்டல செயற் பொறியாளர் பாண்டுரங்காவை பார்த்ததும், கோபமடைந்த துணை முதல்வர், 'பார்த்தாயா. இந்த சாலையில் எப்படி செல்வது. சாலை சீரமைத்து விட்டோம் என்று போலி அறிக்கை மட்டும் தந்துள்ளீர்கள். யாருக்கு டெண்டர் வழங்கினீர். ஒப்பந்ததாரர் யார். இரண்டு நாட்களில் சாலை சீரமைக்காவிட்டால், நடப்பது வேறு. மீண்டும் வந்து ஆய்வு செய்வேன். உஷார்' என, கூறி காரில் புறப்பட்டார்.இதனால், வருத்தமும், அதிருப்தியும் அடைந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை வரவழைத்து, அவர்களை கடிந்து கொண்டனர். சாலையை சீரமைக்க உத்தரவிட்டனர். பணிகளும் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X