மினி விதான்சவுதா விற்பனைக்கு...விவசாயியின் நூதன போராட்டம்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 23, 2021
Share
Advertisement
பல்லாரி: தன் நிலத்தை கையகப்படுத்திக்கொண்டு, நிவாரணம் வழங்காமல், இழுத்தடித்த அரசு மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையால், மனம் வெறுத்த விவசாயி, மினி விதான்சவுதாவை, விற்பனைக்கு வைத்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.பல்லாரி மாவட்டம், ஹூவினஹடகலியில் வசிப்பவர், விவசாயி மல்லப்பா பனகார். இப்பகுதியில், மினி விதான்சவுதா கட்டுவதற்காக, இவரது நிலத்தை, 2009ல் அரசு கையகப்படுத்தியது. 2013ல்,

பல்லாரி: தன் நிலத்தை கையகப்படுத்திக்கொண்டு, நிவாரணம் வழங்காமல், இழுத்தடித்த அரசு மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையால், மனம் வெறுத்த விவசாயி, மினி விதான்சவுதாவை, விற்பனைக்கு வைத்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்லாரி மாவட்டம், ஹூவினஹடகலியில் வசிப்பவர், விவசாயி மல்லப்பா பனகார். இப்பகுதியில், மினி விதான்சவுதா கட்டுவதற்காக, இவரது நிலத்தை, 2009ல் அரசு கையகப்படுத்தியது. 2013ல், மினி விதான்சவுதா கட்டப்பட்டது.ஆனால், விவசாயி மல்லப்பாவுக்கு, நிவாரணம் வழங்கப்படவில்லை. பத்து ஆண்டாக அலைந்தும், நிவாரணம் கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை.

இதனால், மனம் வெறுத்த விவசாயி, தன் நிலத்தில் கட்டப்பட்டுள்ள மினி விதான் சவுதா, விற்பனைக்கு உள்ளதாக, துண்டுப்பிரசுரம் அச்சிட்டு, பொது மக்களுக்கு வினியோகித்து வருகிறார். இதன் மூலம் அரசுக்கு எதிராக, போராட்டத்தை துவக்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X