கர்நாடகா மேலவையில் பா.ஜ., காங்., உறுப்பினர்கள் ரகளை

Added : ஜன 23, 2021
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகா மேலவையில், பா.ஜ., காங்கிரஸ் உறுப்பினர்களின் ரகளைக்கு, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, அமைச்சர் மாதுசாமியும் தான் துாண்டி விட்டனர் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, விசாரணை கமிட்டி, மேலவை தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.கர்நாடகா மேலவையில், கடந்தாண்டு டிச., 15ல், பா.ஜ., - காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து

பெங்களூரு: கர்நாடகா மேலவையில், பா.ஜ., காங்கிரஸ் உறுப்பினர்களின் ரகளைக்கு, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, அமைச்சர் மாதுசாமியும் தான் துாண்டி விட்டனர் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, விசாரணை கமிட்டி, மேலவை தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.கர்நாடகா மேலவையில், கடந்தாண்டு டிச., 15ல், பா.ஜ., - காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க, ம.ஜ.த., - எம்.எல்.சி., மரிதிப்பே கவுடா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி, விசாரணை நடத்தி, 84 பக்கம் கொண்ட இடைக்கால அறிக்கையை, மேலவை தலைவர் பிரதாப் சந்திர ெஷட்டியிடம், நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர்.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.அறிக்கையில், 'அமைதியாக இருந்த உறுப்பினர்களை, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, அமைச்சர் மாதுசாமி ஆகியோர் தான், துாண்டி விட்டனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இது தவிர, ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், ரகளையில் ஈடுபட்ட, இரு கட்சி உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், மேலவை தலைவர் மீது, இரண்டாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நோட்டீஸ், பா.ஜ.,வினர் வழங்கியுள்ளனர்.வரும், 28 ல், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதால், அன்றைய தினம், இத்தீர்மானம் குறித்து முடிவு செய்யப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X