பிரமுகர்களின் பெயர்களை வைத்து ஏமாற்றிய மோசடி சாமியார்

Added : ஜன 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., பிரமுகர்களின் பெயர்களை வைத்து, பலரை ஏமாற்றி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சாமியார் யுவராஜ் மனைவி பெயரில் உள்ள, 70 கோடி ரூபாய் சொத்தை முடக்க, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., மேலிட தலைவர்களின் பெயரை கூறி, பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய், சாமியார் யுவராஜ் என்பவர் மோசடி செய்தார். அவரை, சி.சி.பி., எனும் மத்திய

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., பிரமுகர்களின் பெயர்களை வைத்து, பலரை ஏமாற்றி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சாமியார் யுவராஜ் மனைவி பெயரில் உள்ள, 70 கோடி ரூபாய் சொத்தை முடக்க, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., மேலிட தலைவர்களின் பெயரை கூறி, பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய், சாமியார் யுவராஜ் என்பவர் மோசடி செய்தார். அவரை, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.விசாரணையில், பலரை ஏமாற்றி, மனைவி பிரேமா பெயரில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான, 26 சொத்து வாங்கியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இது தொடர்பான ஆவணங்களை, சி.சி.பி., அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால், அந்த சொத்துக்களை முடக்க வேண்டும் என்று சி.சி.பி., தரப்பில் பெங்களூரு நகரின், 67 வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த நீதிமன்றம், யுவராஜ் மனைவி பெயரிலுள்ள 70 கோடி ரூபாய் சொத்தை முடக்க உத்தரவிட்டது. மேலும், பினாமி பெயரில் சொத்து சேர்த்துள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜன-202102:28:58 IST Report Abuse
தமிழவேல் அப்போ, இவரு ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.க, அங்கத்தினர் இல்லைன்னு சொல்லுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X