தமிழகத்துடன் எனக்கு ரத்த உறவு: பிரசாரத்தில் ராகுல் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துடன் எனக்கு ரத்த உறவு: பிரசாரத்தில் ராகுல் பேச்சு

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (22)
Share
திருப்பூர் :''தமிழகத்துடன் எனக்கு ரத்த உறவு உள்ளது' என திருப்பூரில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.தமிழகத்தில் மூன்று நாள் பிரசார பயணமாக ராகுல் நேற்று கோவை வந்தார். 'தொழில் துறைக்கு தோள் கொடுப்போம்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: தொழில் துறையின் முதுகெலும்பாக கோவை திகழ்கிறது. மத்திய அரசு அறிமுகம் செய்த ஜி.எஸ்.டி. சிறு குறு மற்றும்
தமிழகம், ரத்த உறவு,  திருப்பூர் பிரசாரம், ராகுல், ராகுல் காந்தி, காங்கிரஸ், காங்,

திருப்பூர் :''தமிழகத்துடன் எனக்கு ரத்த உறவு உள்ளது' என திருப்பூரில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.

தமிழகத்தில் மூன்று நாள் பிரசார பயணமாக ராகுல் நேற்று கோவை வந்தார். 'தொழில் துறைக்கு தோள் கொடுப்போம்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: தொழில் துறையின் முதுகெலும்பாக கோவை திகழ்கிறது. மத்திய அரசு அறிமுகம் செய்த ஜி.எஸ்.டி. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதிக்கின்றன. காங். ஆட்சிக்கு வந்ததும் 'ஒரே வரி; குறைந்தபட்ச வரி' என ஜி.எஸ்.டி. எளிமையாக்கப்படும்.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொழில் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு பாதகமாகவே வேளாண் சட்டத்திருத்த மசோதா உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பாதிப்பு தரும் மூன்று வேளாண் சட்டங்களும் நீக்கப்படும். தொழில் முனைவோர்
பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கடந்த காலங்களில் தமிழகம் தான் தொழில் துறை உற்பத்தி துறையில் சிறந்து விளங்கியது. தமிழகம் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவ்வளவு பெருமைகளையும் தமிழகம் தற்போது இழந்து கொண்டிருக்கிறது. தமிழகத்துடன் எனக்கு ரத்த உறவு உள்ளது. தமிழகத்தில் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என்பதற்காகவே செயல்படுகிறேன். இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் ராகுல் பேசியதாவது:நீங்கள் பிரதமரின் 'மான் கீ பாத்' கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; மக்களின் 'மான் கீ பாத்' - மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க நான் தமிழகம் வந்துள்ளேன். ஏழை மக்களின் நிலையை இளைஞர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றி தருகிறேன்; வரும் தேர்தலில் புதிய அரசு அமையும், என்றார்


திருப்பூர் குமரனுக்கு அஞ்சலி


திருப்பூர் குமரன் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி செலுத்தினார். சுதந்திர போராட்ட வரலாற்றை கேட்டறிந்த ராகுல் ''திருப்பூர் குமரனுக்கு அஞ்சலி செலுத்தியது வாழ்நாளில் நான் செய்த பாக்கியம்'' என்று நெகிழ்ச்சியாக கூறினார்.குமரனின் வரலாற்றை விளக்கும் படக்காட்சிகளை பார்த்தவர் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் நினைவிடத்திலும் மலர் மரியாதை செலுத்தினார். 12 நிமிடங்கள் அங்கிருந்தார்.


பேக்கரியில் டீ குடித்த ராகுல்


திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசிலிங்கம்பாளையம் பிரிவில் சாலையோரம் உள்ள ஒரு பேக்கரி முன் வாகனத்தை நிறுத்த சொன்ன ராகுல் கடைக்குள் சென்றார். அங்கு அமர்ந்து டீ குடித்து கடைக்காரர்களிடம் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X