கொரோனா நிவாரண தொகை 3 மடங்கு உயர்த்தினார் பைடன்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
வாஷிங்டன், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீட்க நிவாரண தொகையை மூன்று மடங்கு உயர்த்தி அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தொடர்ந்து பல உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார்.மூன்றாம் நாளாக நேற்றும் பல்வேறு உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதில்

வாஷிங்டன், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீட்க நிவாரண தொகையை மூன்று மடங்கு உயர்த்தி அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தொடர்ந்து பல உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார்.
மூன்றாம் நாளாக நேற்றும் பல்வேறு உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதில் முக்கியமாக கொரோனா நிவாரண உதவித் தொகையை மூன்று மடங்காக உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலால் நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க மக்கள் அனைவருக்கும் தலா 21,900 ரூபாய் வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அது போதாது.
மக்கள் கவுரமாக வாழ உதவிட வேண்டியது அரசின் கடமை. அதனால் இந்த உதவித்தொகையை 1.46 லட்சம் ரூபாயாக உயர்த்தி
உத்தரவிட்டுள்ளேன்.
வைரஸ் பாதிப்பால் 1.8 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். மக்கள் பசியுடன் இருக்க அனுமதிக்க மாட்டோம்; வீட்டு வாடகைகூட தர முடியாமல் உள்ளனர். பலர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அது தடுக்கவே இந்த நிவாரண உதவித்தொகை திட்டம்.
இவ்வாறு அவர்
கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X