சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் மறியல்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் கச்சத்தீவில் மீன்பிடி உரிமை பெற்று தரக் கோரி ராமேஸ்வரம் அருகே இறந்த மீனவர் உடலுடன் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.ஜன.,18ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மெசியா, சாம், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து, படகை மூழ்கடித்தனர். 4 மீனவர்களையும்இலங்கை வீரர்கள் இரும்பு தடியால்

ராமேஸ்வரம் கச்சத்தீவில் மீன்பிடி உரிமை பெற்று தரக் கோரி ராமேஸ்வரம் அருகே இறந்த மீனவர் உடலுடன் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.
ஜன.,18ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற
மீனவர்கள் மெசியா, சாம், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து, படகை மூழ்கடித்தனர். 4 மீனவர்களையும்இலங்கை வீரர்கள் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தனர் என தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
நேற்று இலங்கையில் பிரேத பரிசோதனை செய்த பின் நம் கடலோர காவல் படை பாதுகாப்புடன் விசைப்படகில் 4 பேரின் உடல் கோட்டை
பட்டினம் கடற்கரை
வந்தது.
அங்கிருந்து அமரர்
ஊர்தியில் கொண்டு வரப்பட்ட சாம், நாகராஜ்,
செந்தில்குமார் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்திற்கு மெசியா உடல் வந்ததும் மீனவர்கள் வாங்க மறுத்தனர். பின் கச்சத்தீவில் மீன்பிடி உரிமை பெற்று தரக் கோரி அமரர் ஊர்தியில் உடல் இருந்தபடி ராமேஸ்வரம், மதுரை தேசிய சாலையில் ஏராளமான மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் உடல் கல்
லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., கார்த்திக் சமரச
பேச்சு நடத்தியதும்,
மறியல் வாபஸ் ஆனது.----
அதிகாரிகள் அஞ்சலி
-----ராமநாதபுரம்: இலங்கையில் உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் நேற்று மாலை ராமநாதபுரம் வந்தது. கிழக்கு கடற்கரைச்சாலை சந்திப்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி., கார்த்திக் ஆகியோர் மீனவர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கீழக்கரை, ராமநாதபுரம் தாசில்தார்கள் முன்னிலையில் மீனவர்களின் உடல்கள்
அவரவர் ஊர்களுக்கு
எடுத்துச்செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X