ராமநாதபுரம்:அ.தி.மு.க., ஆட்சியில் மீனவர்கள், விவசாயிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, என தி.மு.க., மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., பேசினார்.
ராமநாதபுரத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் குழாய் பராமரிக்கப்படாமல் தண்ணீர் வீணாகிறது. நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.
பெண்கள் மற்றும் விவசாயிகள், மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொரோனா நிவாரணம், பாலப்பணி என அனைத்திலும் ஊழல் நடக்கிறது.' இவ்வாறு அவர் பேசினார்.
மன்னிப்பு கேட்ட கனிமொழி
ராமநாதபுரத்தில்
மகளிர் குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், சமீபத்தில்
இலங்கையில் மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர், என
தவறாக கூறி, அப்புறம் சுதாரித்துக்கொண்டு, மன்னிக்கவும் படகில்
செல்லும்போது தாக்கப்பட்டுஇறந்துள்ளனர்,
என்றார்.ராமநாதபுரத்தை தொடர்ந்து தேவிபட்டினம், தொண்டி, திருவாடானை பகுதியில்
தேர்தல் பிரசாரம் செய்தார்.
முன்னதாக ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கியதில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம்நிதி வழங்கினார். தங்கச்சிமடத்தில் நாட்டுபடகு மீனவர்கள், பாம்பனில் கடற்பாசி, சங்கு உற்பத்தியாளர் சந்திப்பு, மகளிர் சுயஉதவிக்குழுவினரை சந்தித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE