சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளை போன ரூ.10 கோடி நகை மீட்பு: வடமாநில கொள்ளையர்கள் 7 பேர் கைது

Added : ஜன 24, 2021
Share
Advertisement
ஓசூர்:ஓசூரில் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து துப்பாக்கி முனையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த ஏழு பேர் கும்பலை தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள் 97 தோட்டாக்கள் மற்றும் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில்நேற்று முன்தினம்
கொள்ளை போன ரூ.10 கோடி நகை மீட்பு: வடமாநில கொள்ளையர்கள் 7 பேர் கைது

ஓசூர்:ஓசூரில் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து துப்பாக்கி முனையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த ஏழு பேர் கும்பலை தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள்
97 தோட்டாக்கள் மற்றும் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில்நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு வாடிக்கையாளர் போல் சென்ற ஆறு பேர் கும்பல் துப்பாக்கிகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ஊழியர்களை கட்டிப்போட்டு லாக்கரில் இருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ 91 கிராம் நகைகள் மற்றும் 93 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து பைக்கில் தப்பினர்.

கொள்ளை கும்பல் தப்பி செல்லும் போது ஊழியர்களின் அலைபேசிகளையும் பறித்து
சென்றனர். அந்த போன் டவரை வைத்து போலீசார் 'டிராக்' செய்தபோது கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி - ஆனைக்கல் இடையேயுள்ள கர்ப்பூரா பகுதியில் சாலையோரம் இருந்த முட்புதரில் முத்துாட் மேலாளர் சீனிவாசராகவாவின் அலைபேசி மற்றும் கொள்ளை கும்பலின் கையுறைகள் கண்டெடுக்கப்பட்டன.

கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளுடன் ஜி.பி.எஸ். கருவி இருந்ததால் அதன் மூலம்
கண்காணித்ததில் அத்திப்பள்ளி - ஆனைக்கல் சாலையில் கன்டெய்னர் லாரியில்
கொள்ளையடித்த நகைகளை போட்டு விட்டு லாரியில் இரு கொள்ளையர்களும் காரில் நான்கு பேரும் தப்பியது தெரிந்தது. ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் அவர்கள் தெலுங்கானா
மாநிலத்துக்குள் நுழைவதை அறிந்து சைபராத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனருக்கு கிருஷ்ணகிரி எஸ்.பி தகவல் தெரிவித்தார். இைதயடுத்து கமிஷனர் சஜ்ஜனார் தலைமையில் போலீசார்
ஷம்ஷாபாத் டோல்கேட் அருகே லாரி மற்றும் காரை மடக்கினர்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ரூப்சிங் பாகல் 22 அவரது அண்ணன் ஷங்கர் சிங்பாகல் 36 பவன்குமார் விஸ்கர்மா 22 ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மன்ஜி 24 விவேக் மண்டல் 32 உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் தேக்குராம் 55 கிளீனர் ராஜீவ்குமார் 35 ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்துாரைச் சேர்ந்த அமித் என்பவரை தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள் 97 தோட்டாக்கள் கன்டெய்னர் லாரி கார் கத்தி 13 அலைபேசிகள் மற்றும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை சம்பவம் நடந்த 18 மணி நேரத்தில் சைபராபாத் போலீசார் உதவியுடன்
தமிழக போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

சைபராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டிகங்காதர்
கூறியதாவது:ஓசூரில் நடந்த கொள்ளை தொடர்பாக ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா என மூன்று மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து கூட்டு முயற்சியாக சைபராபாத் உள்ளிட்ட போலீசார் உதவியுடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


பஞ்சாப்பில் கைவரிசை



தலைமறைவாக உள்ள அமித் மற்றும் கைதான ரூப்சிங் பாகல் ஷங்கர்சிங் பாகல் மற்றும் மூவர் அக்டோபரில் பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டனர். இதில் மூவர் கைதான நிலையில் ரூப்சிங் பாகல் ஷங்கர்சிங் பாகல் அமித் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அமித் தவிர மற்ற இருவரும் சிக்கியுள்ளனர்.


சதித்திட்டம் தீட்டியது எப்படி



பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் நடந்த கொள்ளையில் தலைமறைவான பின் மாணவர்
ரூப்சிங் பாகல் அமித் ஆகியோர் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள மூன்று மாதங்களுக்கு முன் பெங்களூரு வந்தனர். அப்போது ஏற்பட்ட பண நெருக்கடியால் ஓசூர் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டினர். ஆயுதங்களை சேகரித்த பின் தன்
அண்ணன் ஷங்கர்சிங் பாகலை ரூப்சிங் அழைத்துள்ளார். அதேபோல் தனக்கு பழக்கமான விவேக் மண்டலை அமித் அழைத்தார். சம்பவத்திற்கு 15 நாட்களுக்கு முன் ஷங்கர்சிங் பாகல் மற்றும் பவன்குமார் விஸ்கர்மா ஆகியோர் அமித்துடன் தங்கி சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X