அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : தி.மு.க.,வை புரிந்து கொள்ளுங்கள்!

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: -வி.எஸ்.ஹரிஹரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: வழக்கம் போல, 'மைனாரிட்டி' மக்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து, தி.மு.க., தன் அரசியல் பயணத்தைத் தொடர்கிறது. அதுவும், 2021 தேர்தலில் எப்படியாவது சிறுபான்மையினரின் ஓட்டுகளை ஒட்டு மொத்தமாக அள்ளும் நோக்கில், அதன் செயல்பாடு வேகமெடுத்துள்ளது.இதற்காக,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: -
வி.எஸ்.ஹரிஹரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: வழக்கம் போல, 'மைனாரிட்டி' மக்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து, தி.மு.க., தன் அரசியல் பயணத்தைத் தொடர்கிறது. அதுவும், 2021 தேர்தலில் எப்படியாவது சிறுபான்மையினரின் ஓட்டுகளை ஒட்டு மொத்தமாக அள்ளும் நோக்கில், அதன் செயல்பாடு வேகமெடுத்துள்ளது.



latest tamil news


இதற்காக, ஏதாவது ஒரு அரசியல் கூட்டம் நடத்தி, அதில் சிறுபான்மையினர் தலைவர்களை அழைத்து, பேச வைக்கிறது; அவர்களும், தி.மு.க.,விற்கு ஓட்டு சேகரிக்கின்றனர்.இது தவிர, ஆந்திராவில் இயங்கி வரும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசிக்கும், தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. இதன் நோக்கம், எப்படியாவது சிறுபான்மையினரின் ஓட்டுகளை மொத்தமாக அள்ள வேண்டும் என்பது தான்; மற்றபடி, சிறுபான்மையினர் மீது அக்கறை எல்லாம் ஒன்றும் இல்லை.இதுநாள் வரை, 'கூஜா' துாக்குவதற்கு மட்டுமே அதன் தலைவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தி.மு.க., தலைவர், பொதுச்செயலர் என, எந்த முக்கிய பொறுப்பும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.


latest tamil news


உண்மையில், சிறுபான்மையினரின் விரோதி, தி.மு.க., தான். ஹிந்து மதவாதிகள் என விமர்சிக்கப்படும், பா.ஜ., தான், திறமையின் அப்படையில், அப்துல் கலாமை, ஜனாதிபதியாக்கியது.அக்கட்சியிலும், மத்திய அரசிலும், பல முக்கிய பொறுப்புகளில் சிறுபான்மையினர் உள்ளனர்.எங்கே, தி.மு.க.,வில் ஒரு சிறுபான்மையினராவது முக்கிய பொறுப்பில் உள்ளனரா என்பதை சுட்டிக் காட்டுங்களேன்...இதே போலத் தான், தாழ்த்தப்பட்டோர் மீதான, தி.மு.க.,வின் கரிசனமும்.கருணாநிதி, அவரின் மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி, பேரன் உதயநிதி உட்பட ரத்த சொந்தங்கள் தான், தி.மு.க.,வின் அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பர்.

தி.மு.க.,வின், 'சிறுபான்மையினர் நலன்' என்ற மாய வலையில், இன்னும் எவ்வளவு காலம் தான் அவர்கள் ஏமாற போகின்றனரோ?தி.மு.க.,வை விரைவில் புரிந்துகொள்வது, சிறுபான்மையினருக்கு நன்மை பயக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
25-ஜன-202108:20:37 IST Report Abuse
RajanRajan கோபாலபுரத்திலேயும் அறிவாலையத்துலேயும் யாரோ டயரை கொளுத்தி போட்டுட்டாங்கப்பா. இத்தோட சொல்லி முடிஞ்சுது.
Rate this:
Cancel
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
24-ஜன-202122:47:12 IST Report Abuse
SureshKumar Dakshinamurthy மினாரிட்டிகளுக்கு இந்துக்களை கேலி செய்தல் போதும் - ஓட்டு போடு விடுவார்கள். இது திமுகவிற்கு நன்கு தெரியும்
Rate this:
Cancel
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
24-ஜன-202122:46:02 IST Report Abuse
SureshKumar Dakshinamurthy minorities
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X