சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கடத்திய ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
சென்னை:துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் இருந்து மூன்று விமானங்களில் கடத்தி வரப்பட்ட 4.30 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு இரு வேறு விமானங்கள் சென்னை வந்தன. அந்த விமானங்களில் வந்த நான்கு பெண்கள் உட்பட 17 நபர்களிடம் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.அதில் அவர்களது

சென்னை:துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் இருந்து மூன்று விமானங்களில் கடத்தி
வரப்பட்ட 4.30 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு இரு வேறு விமானங்கள் சென்னை வந்தன. அந்த விமானங்களில் வந்த நான்கு பெண்கள் உட்பட 17 நபர்களிடம் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.அதில் அவர்களது உடைமைகள் மற்றும் ஆசனவாய்களில் இருந்து 8.18 கிலோ கிராம் தங்க கட்டிகள் நகைகள் சிக்கின; அதன் மதிப்பு 4.16 கோடி ரூபாய்.
மற்றொரு சம்பவத்தில் ஷார்ஜா நகரில் இருந்து 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன்தினம் இரவு 8:50 மணிக்கு சென்னைக்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் இலியாஸ் 28 என்பவரை
சோதனையிட்டபோது அவரது ஆசனவாயிலிருந்து 271 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது; அதன் மதிப்பு 14 லட்சம் ரூபாய்.தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்து சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X