பொது செய்தி

இந்தியா

ஆழ்கடலில் குவியும் முக கவசங்கள்... ஆழ்கடல் பயிற்சியாளர் கண்டுபிடிப்பு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஆழ்கடலில் கொரோனாவிற்கு பயன்படுத்திய முக கவசங்கள்கிடப்பதாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன், டெம்பிள் அட்வன்ச்சர்ஸ் என்ற ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். பயிற்சிக்காக கடலுக்குள் செல்லும்போது, ஆழ்கடலின் தன்மைகளை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார். கொரோனா காலத்தில், ஆழ்கடலில்

புதுச்சேரி : ஆழ்கடலில் கொரோனாவிற்கு பயன்படுத்திய முக கவசங்கள்கிடப்பதாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன், டெம்பிள் அட்வன்ச்சர்ஸ் என்ற ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். பயிற்சிக்காக கடலுக்குள் செல்லும்போது, ஆழ்கடலின் தன்மைகளை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார். கொரோனா காலத்தில், ஆழ்கடலில் குப்பை கழிவுகளின்றி துாய்மையாக இருக்கும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.புயல் மழைக்கு பிறகு, சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பயிற்சிக்கு சென்ற அரவிந்தன் குழுவினர், கடல் அடிபகுதியில் கொரோனா பாதுகாப்பிற்காக பயன் படுத்திய முக கவசங்கள் ஏராளமாக கிடப்பதை கண்டறிந்தனர்.

ஆழ்கடலில் முக கவசங்கள் சேகரிக்கும் வீடியோ வெளியிட்டு அரவிந்தன் கூறுகையில்; புதுச்சேரி சென்னை இடையிலான கடல் பகுதியில், மழை காரணமாக பிளாஸ்டிக் கழிவுகளுடன் கொரோனா காலத்தில் பயன்படுத்திய முக கவசங்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கடலில் கலந்துள்ளது.ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இணையாக முக கவசங்கள் கிடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முக கவசங்களை முறையாக அகற்றினால், நோய் தொற்றில் இருந்து தப்பிப்பதுடன், இயற்கையையும் காப்பாற்றலாம், என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X