பொது செய்தி

இந்தியா

'உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தால் நீரிழிவு நோய் தொந்தரவு தராது'

Added : ஜன 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தால் நீரிழிவு நோய் தொந்தரவு தராது என சென்னை மியாட் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் விஜயபிரசாத் கூறினார். சென்னை மியாட் மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் ஜெய்சங்கர், நீரிழிவு, தைராய்டு, உடல் பருமன் சிகிச்சை நிபுணர் விஜயபிரசாத் நேற்று புதுச்சேரி ராஜிவ் காந்தி மருத்துவமனை பின்புறம் உள்ள தி பாஷ் மருத்துவமனைக்கு

புதுச்சேரி : உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தால் நீரிழிவு நோய் தொந்தரவு தராது என சென்னை மியாட் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் விஜயபிரசாத் கூறினார்.

சென்னை மியாட் மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் ஜெய்சங்கர், நீரிழிவு, தைராய்டு, உடல் பருமன் சிகிச்சை நிபுணர் விஜயபிரசாத் நேற்று புதுச்சேரி ராஜிவ் காந்தி மருத்துவமனை பின்புறம் உள்ள தி பாஷ் மருத்துவமனைக்கு வருகை தந்து பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கினர்.நெஞ்சு வலி, வியர்த்தல், களைப்பு, கை, தாடை, கழுத்தில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், ஒழுங்கற்ற இதய துடிப்பு, கால்களில் வீக்கம், இனம் புரியாத உணர்வு இழப்பு, அதிக ரத்த அழுத்தம் குறித்த சந்தேகங்களை விளக்கினர்.மேலும் நீரிழிவு பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகள், கருவுறாமை, எலும்புப்புரை, வளர்ச்சி கோளாறுகள், பாலிசிஸ்ட்டிக் கருப்பை நோய் (பி.சி.ஓ.டி.,) மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

சென்னை மியாட் மருத்துவமனை நீரிழிவு, தைராய்வு உடல் பருமன் நிபுணர் விஜய பிரசாத் கூறியதாவது:உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரித்து செலவிட வழியின்றி கொழுப்பாகி உடல் எடை அதிகரிக்கிறது.அதிகரித்த எடைக்கும் சேர்த்துக் அதிகளவில் இன்சுலினைச் சுரக்கும் கணையம் களைத்து, சுரப்பது குறைகிறது அல்லது நிற்பதால் நீரிழிவு நோய் வருகிறது.உலகளவில் சீனாவை அடுத்து இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம்.

கார்போைஹட்ரேட் உள்ள அரிசி உணவை நாம் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணமாக உள்ளது.நீரிழிவை குணப்படுத்த முடியாது. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தால் தொந்தரவு தராது. சரியான அளவில் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். சர்க்கரை உள்ள உணவை முழுவதும் தவிர்க்க வேண்டும். காபி அல்லது டீயில் அரை சர்க்கரை சேர்ப்பது சரியில்லை. முழுவதுமாகவே சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X