பா.ஜ.,தலைவர் நட்டா 31ம் தேதி வருகை

Added : ஜன 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, வரும் 31ம் தேதி புதுச்சேரி வருகிறார்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, வரும் 29ம் தேதி புதுச்சேரிக்கு வருவதாகவும், 30ம் தேதி வரை இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நட்டா வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமானம் மூலமாக வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு புதுச்சேரிக்கு

புதுச்சேரி : பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, வரும் 31ம் தேதி புதுச்சேரி வருகிறார்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, வரும் 29ம் தேதி புதுச்சேரிக்கு வருவதாகவும், 30ம் தேதி வரை இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நட்டா வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விமானம் மூலமாக வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் அவர், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, ஏ.எப்.டி., மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்கிறார். மறைந்த சங்கர் எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான என்.ஆர்., காங்., - அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறார்.மதிய உணவிற்கு பிறகு, பா.ஜ., உயர்மட்டக் குழு கூட்டத்தில் நட்டா கலந்து கொள்கிறார். தொடர்ந்து, மாநில நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு, மாலை 5:00 மணியளவில் புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X