புதுச்சேரி : குண்டும் குழியுமான தார்சாலைகளை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர், புரெவி புயல் மழை காரணமாக பல இடங்களில் சாலை சேதமாகின. நகரில் சேதமான சாலைகளை கவர்னர் கிரண்பேடி, தனி செயலர் ஸ்ரீதரனுடன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். தாவரவியல் பூங்கா வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை வழியாக முதலியார்பேட்டை-கடலுார் சாலை சென்ற கவர்னர், காரை விட்டு இறங்கி மோசமான சாலைகள் தொடர்பாக பொதுப் பணித் துறை தலைமை பொறியாளர் மகாலிங்கத்திடம் கேட்டறிந்தார்.
நகரம் முழுவதுமே தார் சாலைகள் இப்படி தான் உள்ளது. சேதமான சாலைகளை சரி செய்ய கடந்தாண்டில் 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் 25 சதவீத விலை புள்ளி குறைவு காரணமாக ஒப்பந்தம் எடுக்காததால் சாலை சீரமைக்கவில்லை, என்றனர். இதனை கேட்ட கவர்னர், புதிய சாலை போடும் வரை பொதுமக்கள் பாதிக்க கூடாது. தற்காலிகமாக பள்ளங்களை நிரப்புமாறு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார். பின் அதே வழியாக மீண்டும் ராஜ் நிவாசிற்கு கவர்னர் திரும்பினர்.நாளை துறை செயலருடன் விவாதம்ஆய்விற்கு கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில்,சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்த பிறகு காரணங்களை தெரிந்து கொண்டேன்.
இது சம்பந்தமாக தாமதமின்றி முடிவெடுத்து செயல்படுத்த நாளை 25 ம்தேதி பொதுப்பணித் துறை செயலாளர் சுர்பீங் சிங்கை நேரில் சந்திக்க அறிவுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE