சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் படகிற்கு தீ வைப்பு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:பாம்பனில் முன்விரோதத்தில் சிலர் விசைப்படகிற்கு தீ வைத்ததில், படகுஎரிந்ததால் ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.ஜன.,22ல் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு பாம்பன் கரை திரும்பிய இஸ்ரேல் பாக்கியம் என்பவரது விசைப்படகில் இருந்து மீன்களை இறக்கி விட்டு கடற்கரையில் நிறுத்தினர்.நேற்று அதிகாலை திடீரென படகில் தீ பிடித்து எரிந்து, அப்பகுதிமுழுவதும் புகை
பாம்பனில் படகிற்கு தீ வைப்பு

ராமேஸ்வரம்:பாம்பனில் முன்விரோதத்தில் சிலர் விசைப்படகிற்கு தீ வைத்ததில், படகுஎரிந்ததால் ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

ஜன.,22ல் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு பாம்பன் கரை திரும்பிய இஸ்ரேல் பாக்கியம் என்பவரது விசைப்படகில் இருந்து மீன்களை இறக்கி விட்டு கடற்கரையில் நிறுத்தினர்.நேற்று அதிகாலை திடீரென படகில் தீ பிடித்து எரிந்து, அப்பகுதிமுழுவதும் புகை
மண்டலமானது.

மீனவர்கள் தீயை அணைத்தனர். இதில்படகில் இருந்த மீன்வலைகள், படகின் மரப்பலகைகள், இன்ஜின் உள்ளிட்ட மீன்பிடிதளவாட பொருட்கள்எரிந்தது.மண்டபம் மரைன் போலீசார்
விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக சிலர் படகிற்கு தீ வைத்து தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X