பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுனர் பயிற்சி தளம் முதல்வர் திறந்து வைப்பு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
சென்னை:நாகர்கோவில், ராணித் தோட்டத்தில், 1 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டுனர் பயிற்சி தளத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் பழனிசாமி., திறந்து வைத்தார்.இதன் வாயிலாக, கன்னியாகுமரி மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள, அரசு பஸ் டிரைவர்களுக்கும், தனியார் வாகன டிரைவர்களுக்கும், தரமான ஓட்டுனர் பயிற்சி வழங்கவும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர்களுக்கு,

சென்னை:நாகர்கோவில், ராணித் தோட்டத்தில், 1 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டுனர் பயிற்சி தளத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் பழனிசாமி., திறந்து வைத்தார்.

இதன் வாயிலாக, கன்னியாகுமரி மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள, அரசு பஸ் டிரைவர்களுக்கும், தனியார் வாகன டிரைவர்களுக்கும், தரமான ஓட்டுனர் பயிற்சி வழங்கவும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர்களுக்கு, சிறப்பு புத்தாக்க பயிற்சி அளித்து, ஓட்டுனர் திறனை மேம்படுத்தவும், வழிவகை ஏற்படும்.

சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய நகரங்களில் உள்ள, அரசு தானியங்கி பணிமனைகளின் பயன்பாட்டிற்காக, 15.82 லட்சம் ரூபாய் செலவில், இலகுரக வாகனங்களின் மின்னணு பழுதுகளை கண்டறிய, நவீன ரக உயர் தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் சேவையை, முதல்வர் பழனிசாமி., துவக்கி வைத்தார்.

இதன் வாயிலாக, அரசு வாகனங்களை, தனியார்பணிமனைகளுக்கு அனுப்பி, பழுதுகளை ஆய்வு செய்வதற்கான கால விரயம், பழுது நீக்குவதற்கான செலவு தவிர்க்கப்படும். அரசு வாகனங்களில் ஏற்படும் பழுதுகள், உடனுக்குடன் ஆய்வு செய்து, நிவர்த்தி செய்யப்படுவதால், பெரும் பழுதுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


ஓய்வூதிய பணப்பயன்

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, ஓய்வு பெற்ற, 4,442 ஊழியர்களுக்கான பணப்பயன்களின் நிலுவைத் தொகை, 972.43 கோடி ரூபாய். இதை வழங்குவதற்கு அடையாளமாக, ஒன்பது பேருக்கு, நேற்று முன்தினம், முதல்வர் இ.பி.எஸ்., வழங்கி, துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X