பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு கொசுவை அழிக்க மாத்திரை: சென்னையில் விரைவில் சோதனை

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:நல்ல தண்ணீரில், டெங்கு காய்ச்சலை பரப்பும், ஏடிஸ்' கொசு வளர்வதை தடுக்க, தனியார் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை வடிவ மருந்தை, ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தின், பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் சோதனை செய்ய உள்ளது.கொசுக்கள் வாயிலாக பரவும், டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோய்களுக்கு, தடுப்பு மருந்து இல்லாத
 டெங்கு கொசுவை அழிக்க மாத்திரை: சென்னையில் விரைவில் சோதனை

சென்னை:நல்ல தண்ணீரில், டெங்கு காய்ச்சலை பரப்பும், ஏடிஸ்' கொசு வளர்வதை தடுக்க, தனியார் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை வடிவ மருந்தை, ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தின், பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் சோதனை செய்ய உள்ளது.

கொசுக்கள் வாயிலாக பரவும், டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோய்களுக்கு, தடுப்பு மருந்து இல்லாத நிலையில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் வாயிலாக குணமடைகின்றனர்.

இந்நிலையில், டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள, சுற்றுப்புற துாய்மை அவசியம் என, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், தண்ணீரில் கொசு வளர்வதை தடுக்க, தனியார் நிறுவனம், மாத்திரை வடிவ மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை, ஐ.சி.எம்.ஆர்., நிறுவனம், சென்னையில் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொசுக்களை ஒழிப்பது தொடர்பாக, பல்வேறு ஆய்வுகள் நடைபெறுகின்றன. தண்ணீரில் கொசு வளர்வதை தடுக்க, தனியார் நிறுவனம், மாத்திரை வடிவ மருந்து ஒன்றை தயார் செய்துள்ளது.

இந்த மருந்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் என்ற, ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தின் கீழ், புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சோதனை செய்ய உள்ளது.மாத்திரை வடிவில் உள்ள மருந்தை, நல்ல தண்ணீரில் போட்டால்போதும்; தண்ணீரில் உள்ள கொசு லார்வாக்கள் எல்லாம் அழிந்து விடும்.

தண்ணீரையும் நாம் பயன்படுத்தலாம்.சென்னையில் விரைவில், இந்த மாத்திரை தொடர்பான சோதனை நடக்கிறது. எந்தெந்த தண்ணீரில், இந்த மாத்திரையை பயன்படுத்தலாம் என்பதும், ஆய்வு செய்யப்பட உள்ளது. இதன் வாயிலாக, நல்ல தண்ணீரில் வளரக்கூடிய, ஏடிஸ் கொசுவை அழிக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202119:39:17 IST Report Abuse
J.V. Iyer கொரோனாவை டெங்கு அழிக்கும். கவலை வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X