சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது குடித்து தினமும் ரகளை நடிகர் மீது குடியிருப்புவாசிகள் புகார்

Added : ஜன 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:நடிகர் விஷ்ணு விஷால், தினமும் குடித்து விட்டு வந்து, ரகளையில் ஈடுபடுவதாக, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்துள்ளனர்.இது குறித்து, சென்னை, கோட்டூர்புரம், 'கன்கார்டியா விண்டர்சன்' அடுக்குமாடி குடியிருப்பு செயலர் ரங்கபாபு அளித்த புகார் மனு:நடிகர் விஷ்ணு விஷால், குடியிருப்புக்கு வந்த நாளில் இருந்து, தினமும்
 மது குடித்து தினமும் ரகளை நடிகர் மீது குடியிருப்புவாசிகள் புகார்

சென்னை:நடிகர் விஷ்ணு விஷால், தினமும் குடித்து விட்டு வந்து, ரகளையில் ஈடுபடுவதாக, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து, சென்னை, கோட்டூர்புரம், 'கன்கார்டியா விண்டர்சன்' அடுக்குமாடி குடியிருப்பு செயலர் ரங்கபாபு அளித்த புகார் மனு:நடிகர் விஷ்ணு விஷால், குடியிருப்புக்கு வந்த நாளில் இருந்து, தினமும் இரவில் குடித்து விட்டு, மிகவும் மோசமான வகையில் நடந்து கொள்கிறார். இரவில், பல ஆண் நண்பர்களும், பெண்களும், வீட்டுக்கு வருகின்றனர். அதிக சத்தம் எழுப்பும் பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன.


தொந்தரவு

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 1:30 மணியளவில், விஷ்ணு விஷால் குடித்து விட்டு, அதிக சத்தத்தில் பாடல்களை போட்டு, தொந்தரவு செய்தார். நான் மற்றும் எங்கள்அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், போலீசாரை அழைத்தோம். அங்கு வந்த போலீசாரையே, அவர் மிக தரக்குறைவாக, மோசமான வார்த்தைகளால் திட்டினார்.நண்பர்களுடன் சேர்ந்து, மது பாட்டிலால், எங்களை தாக்க முயன்றார்.


பெரும் ரகளை



'என் தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி. என்னிடம் வைத்து கொண்டால், உங்களை விடிவதற்குள் முடித்து விடுவேன். நீ எந்த போலீஸ் நிலையம் சென்று, புகார் செய்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது' என அச்சுறுத்தி, பெரும் ரகளையில் ஈடுபட்டார்.இதனால், அடுக்குமாடியில் வசிக்கும் பெரியவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறோம். இந்த புகார் மனு மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த வாக்குவாதம்; போலீசார் செய்த சமாதானம் தொடர்பான, 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகின.மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரை, விஷ்ணு விஷால் மறுத்துள்ளார்.

இது குறித்து, அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தினமும்மது அருந்தினால், கட்டுகோப்பான உடல்வாகு வராது. இதற்கு, கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். 'மதுவில் இருந்து நீண்ட காலம் விலகி இருக்க வேண்டும். இந்த உண்மை, சிலருக்கு புரிவது இல்லை' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
29-ஜன-202110:33:34 IST Report Abuse
gayathri உண்மை தரம் நடத்தையில் இருந்து தெரியும். .
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜன-202122:32:18 IST Report Abuse
r.sundaram மது குடிக்க வில்லை என்கிறார், ஆனால் தகராறு செய்ததை மறுக்க வில்லை. ஆக குடியிருப்பு வாசிகளுடன் தகராறு நடந்தது உண்மை என்று ஆகிறது. மது குடிக்காமலேயே தகராறு பண்ணுகிறாரா?
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
25-ஜன-202117:37:57 IST Report Abuse
Naduvar இவர் படத்தை யாரும் பார்க்காமல் மக்கள் யார் என்று இவருக்கு காட்டவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X