அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு கோரப்பசி; முழுங்கி விடுவர்! பொள்ளாச்சி பிரசாரத்தில் முதல்வர் விளாசல்

Added : ஜன 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பொள்ளாச்சி:''தி.மு.க.,வினர், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், கோரப்பசியில் உள்ளனர். அவர்களை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாத்தையும் முழுங்கிவிடுவர்,'' என, பொள்ளாச்சியில், முதல்வர் பழனிசாமி பேசினார்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி, ஆனைமலை, நா.மூ.,சுங்கம் பகுதிகளில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தி.மு.க.,வினர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில்
 தி.மு.க.,வுக்கு கோரப்பசி; முழுங்கி விடுவர்! பொள்ளாச்சி பிரசாரத்தில் முதல்வர் விளாசல்

பொள்ளாச்சி:''தி.மு.க.,வினர், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், கோரப்பசியில் உள்ளனர். அவர்களை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாத்தையும் முழுங்கிவிடுவர்,'' என, பொள்ளாச்சியில், முதல்வர் பழனிசாமி பேசினார்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி, ஆனைமலை, நா.மூ.,சுங்கம் பகுதிகளில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தி.மு.க.,வினர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், கோரப்பசியில் உள்ளனர். அவர்களை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாத்தையும் முழுங்கிவிடுவார்கள். தி.மு.க., ஆட்சியில் நில அபகரிப்பு செய்து, விலை மதிப்பற்ற நிலங்களை பறித்தனர். இனிமேல் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டையே பட்டா போட்டு விற்றுவிடுவர்.கோவை மாவட்டம் பெண்கள் பாதுகாப்புக்கு சிறந்த நகரமாகும். தவறான செய்தியை பரப்பி ஆதாயம் தேடுவதை தி.மு.க., நிறுத்திக்கொள்ள வேண்டும்.கொப்பரை விலை உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து நிறைவேற்றினோம். கொப்பரை கிலோவுக்கு, 150 ரூபாய் ஆதார விலை வழங்க வேண்டும் என, பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த, கேரளா முதல்வரை சந்தித்து பேச்சு நடத்தினேன். தற்போது, உயர்மட்ட குழு அமைத்து, இரண்டு மாநில அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்; இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தென்னை விவசாயம் நிறைந்த பொள்ளாச்சியில், விவசாயிகள் பயன்பெற, 'நீரா' பானம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

மாசாணியம்மன் தரிசனம்பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் சார்பில், முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது; வேனில் இருந்த படியே தொட்டுக்கும்பிட்டார். பிரசாரத்தின் இடையே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று, மூலஸ்தானம் முன் தரையில் அமர்ந்து தரிசனம் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
24-ஜன-202113:19:31 IST Report Abuse
Mohammed Abdul Kadar கரெக்ட்டா சொன்னாரு திமுகவுக்கு கோர பசி அதிமுகவுக்கு பசி இல்லை எல்லாம் சுரண்டியாச்சு கஜானா காலி ,எங்கு பார்த்தாலும் லஞ்சம் கிடைப்பத சுருட்டும் அரசு அதிகாரிகள் ஒரு பட்டா அப்ளிகேஷன் போட்டாலும் முப்பது ஆயிரம் கேட்கிறார்கள் பாவிகள் , எல்ல கட்சியும் ஊழல் இருக்கிறது , சகாயம் போல் நேர்மை யான அதிகாரி தமிழ் நாட்டில் ரொம்ப கம்மி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X