சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணி நிரவலில் இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லுாரியில் அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள் 45 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை முறியடிக்க, பல்கலைகழக நிர்வாகம் மருத்துவ மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேற உத்தர விட்டது. ஆனாலும், மாணவர்கள் வெளியேற மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் விடுதி 'மெஸ்' மூடப்பட்டது. நேற்று அதிரடியாக தண்ணீரையும், மின்சாரத்தையும் நிர்வாகம் துண்டித்தது.இதனால், ஆத்திரமடைந்த மாணவிகள், தண்ணீர் கேட்டு பக்கெட்டுடன் தாமரை இல்லம் மு ன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்களுக்கு மதியம் வாங்கிச் சென்ற உணவை போலீசார் தடுத்த நிலையில், மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் ஒரு போராட்டம் : மருத்துவ மாணவர்கள் போராட்டம் ஒருபுறம் இருக்க, நிதி சிக்கலால் பணி நிரவல் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டமும் தற்போது வெடிக்கத் துவங்கியுள்ளது. 3 ஆண்டுகள் போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் தங்களுக்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்திலேயே பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அவ்வப்போது துணைவேந்தர், மற்றும் பதிவாளரை முற்றுகையிடுவது என போராட்டம் நடந்து வந்த நிலையில், நேற்று 500க்கும் மேற்பட்டோர் பல்கலைகழக பதிவாளருக்கு தனித்தனியாக மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் போராட்ட களமாக மாறி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE