திருப்பூர்:அன்னிய பண மதிப்புகள் உயர்வு, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மீண்டெழுவதற்கு 'டானிக்'காக அமைந்துள்ளன.கொரோனா கால பாதிப்புகளிலிருந்து, திருப்பூர் பின்னலாடை துறை, மீண்டெழுந்துவருகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன.
கடந்த கால இழப்புகளை ஈடு செய்ய, ஆடை உற்பத்தியாளர்கள், முனைப்பு காட்டிவருகின்றனர்.இச்சூழலில், அன்னிய பண மதிப்புகள், உயர்ந்து, ஏற்றுமதியாளர்கள், சாதித்துக்காட்டுவதற்கான, சாதகமான நிலையை உருவாக்கி கொடுத்துள்ளன. ஏற்றுமதி ஆடைகளுக்கு விலை நிர்ணயிப்பதில், அமெரிக்க டாலர்; ஐரோப்பாவின் யூரோ; பிரிட்டனின் பணமாகிய பவுண்ட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.பல்வேறு வகை காரணங்களால், இந்திய ரூபாய்க்கு நிகரான அன்னிய பண மதிப்புகள், ஏற்ற - இறக்கங்களை சந்திக்கின்றன. அன்னிய பண மதிப்பில் ஏற்படும் சரிவுகள், ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பாதகத்தை கொடுக்கிறது. அதிகளவு ஆர்டர்கள் கிடைத்தாலும்கூட, அன்னிய பண மதிப்பு குறைந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் தொகை குறைந்துவிடும்.
அன்னிய பண மதிப்பு உயரும்போது, ஏற்றுமதியாளருக்கு சாதகமான சூழல் உருவாகும்.'பிரெக்ஸிட்' பேச்சுகள் துவங்கியதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு முதல், இந்திய ரூபாய்க்கு நிகரான, பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு, 80 ரூபாயாக குறைந்து காணப்பட்டது. மீண்டும் உயர்ந்தாலும், 90 முதல் 93 ரூபாயாகவே தொடர்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டது. இந்நிலையில் தற்போது, பவுண்ட் மதிப்பு, 99.87 ரூபாயாக உயர்ந்து காணப்படுகிறது.கடந்த 2020ல், யூரோ மதிப்பு, 84 முதல் 87 ரூபாயாக காணப்பட்டது; தற்போது, இந்திய ரூபாய்க்கு நிகரான யூரோ மதிப்பு, 88.87 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பை பொருத்தவரை, 73 முதல் 75 ரூபாய் என்கிற அளவில், சிறப்பான நிலையிலேயே தொடர்கிறது.திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் நாடுகள் பாரம்பரியம் மிக்கதாக உள்ளன.
கொரோனாவுக்கு பின் தற்போது, இந்த நாடுகளிலிருந்து ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களும் அதிகளவு வரத்துவங்கியிருக்கின்றன.அன்னிய பண மதிப்புகள் சாதகமான நிலையில் இருப்பதால், வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுவதன்மூலம், ஏற்றுமதி நிறுவனங்கள், சிறப்பான வளர்ச்சியை எட்டமுடியும்.கடந்த 2020ல், யூரோ மதிப்பு, 84 முதல் 87 ரூபாயாக காணப்பட்டது; தற்போது, இந்திய ரூபாய்க்கு நிகரான யூரோ மதிப்பு, 88.87 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பை பொருத்தவரை, 73 முதல் 75 ரூபாய் என்கிற அளவில்,சிறப்பான நிலையிலேயே தொடர்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE