பொது செய்தி

தமிழ்நாடு

1.69 லட்சம், 'டோஸ்' கோவாக்சின் தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Added : ஜன 24, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்திற்கு கூடுதலாக, ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 920 'டோஸ்' கோவாக்சின் தடுப்பு மருந்தை, மத்திய அரசு அனுப்பியுள்ளது.இந்தியாவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடும் பணி, 16ம் தேதி முதல் நடந்து வருகிறது.மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தில் தயாராகியுள்ள,

சென்னை:தமிழகத்திற்கு கூடுதலாக, ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 920 'டோஸ்' கோவாக்சின் தடுப்பு மருந்தை, மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இந்தியாவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடும் பணி, 16ம் தேதி முதல் நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தில் தயாராகியுள்ள, இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கோவிஷீல்டு; தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளை, அவசரகால பயன்பாட்டுக்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த தடுப்பு மருந்துகளை, மத்திய அரசு, மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. அதன்படி, தமிழகத்திற்கு, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500, 'டோஸ்' கோவிஷீல்டு; 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தை, மத்திய அரசு அனுப்பி வைத்தது.சில தினங்களுக்கு முன், இரண்டாவது கட்டமாக, ஐந்து லட்சத்து, 8,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து அனுப்பியது.

இந்நிலையில், ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 920 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தை, நேற்று மத்திய அரசு அனுப்பி உள்ளது.விமானம் வயிலாக வந்த தடுப்பு மருந்து, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X