விவசாயிகளை சுட்டுக்கொல்ல சதி? கைதான நபரிடம் தீவிர விசாரணை

Added : ஜன 24, 2021
Share
Advertisement
சண்டிகர்:மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், 50 நாட்களுக்கும் மேலாக, போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று முன் தினம் இரவு, போராட்டம் நடந்து வரும் டில்லி - ஹரியானா இடையில் உள்ள எல்லைப் பகுதியில், துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டிருந்த நபர்
 விவசாயிகளை சுட்டுக்கொல்ல சதி? கைதான நபரிடம் தீவிர விசாரணை

சண்டிகர்:மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், 50 நாட்களுக்கும் மேலாக, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் இரவு, போராட்டம் நடந்து வரும் டில்லி - ஹரியானா இடையில் உள்ள எல்லைப் பகுதியில், துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டிருந்த நபர் ஒருவரை, விவசாயிகள் பிடித்தனர்.டிராக்டர் பேரணியை சீர்க்குலைக்கும் வகையில், விவசாய சங்கத் தலைவர்கள் நான்கு பேரை சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருந்ததாக, அவர் மீது, விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின், அந்த நபர், ஹரியானா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.அவரிடம், போலீசார் நேற்று விசாரணையை துவங்கினர். எனினும், அவர் சதிவேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததற் கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது. அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டிராக்டர் பேரணிக்கு அனுமதிவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தும் முடிவில், விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், டிராக்டர் பேரணிக்கு, டில்லி போலீசார், நேற்று அனுமதி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X