பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாதோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
சென்னை:தலைமை செயலகத்தில், முக கவசம் அணியாத பணியாளர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, பொதுத்துறை செயலர் செந்தில்குமார், அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும், பணியாளர்களும், பார்வையாளர்களும், கண்டிப்பாக முக கவசம்

சென்னை:தலைமை செயலகத்தில், முக கவசம் அணியாத பணியாளர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பொதுத்துறை செயலர் செந்தில்குமார், அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும், பணியாளர்களும், பார்வையாளர்களும், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

அந்த வகையில், தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும், பணிபுரியும் இடங்களிலும், தலைமை செயலக வளாகத்திலும், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.முக கவசம் அணியாத ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களை, அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. பணிபுரியும் இடத்திலும், அலுவலக வளாகத் திலும், முக கவசம் அணியாத ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அறிவுரைகள் பின்பற்றப்படுவதை, தொடர்ந்துகண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X