பொது செய்தி

தமிழ்நாடு

உங்களுக்கும் இருக்கலாம் ‛ஒனியோமேனியா': ஒழித்துக்கட்டுங்க உடனடியா!

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021
Share
Advertisement
போன வாரம் ஆன்லைனில், ஹேண்ட் பேக் தேடியிருப்பீர்கள். இன்று, நீங்கள் பார்த்த அதே ஹேண்ட்பேக், சலுகை விபரத்துடன் திரையின் மூலையில் தோன்றும். இதுதான், ஆன்லைன் வணிகநிறுவனங்கள் உங்களுக்கு வைக்கும் பொறி.நேரம் மிச்சம், அலைச்சல் இல்லை, எளிமை போன்ற காரணங்களுக்காக, பலரும் இன்று ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்கின்றனர். தேவை என்பதன் அடிப்படையில், பொருட்களை வாங்குவது அவசியமானது.
 உங்களுக்கும் இருக்கலாம் ‛ஒனியோமேனியா':  ஒழித்துக்கட்டுங்க  உடனடியா!

போன வாரம் ஆன்லைனில், ஹேண்ட் பேக் தேடியிருப்பீர்கள். இன்று, நீங்கள் பார்த்த அதே ஹேண்ட்பேக், சலுகை விபரத்துடன் திரையின் மூலையில் தோன்றும். இதுதான், ஆன்லைன் வணிகநிறுவனங்கள் உங்களுக்கு வைக்கும் பொறி.

நேரம் மிச்சம், அலைச்சல் இல்லை, எளிமை போன்ற காரணங்களுக்காக, பலரும் இன்று ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்கின்றனர். தேவை என்பதன் அடிப்படையில், பொருட்களை வாங்குவது அவசியமானது. ஆனால், தேவையில்லை என்ற போதிலும், சலுகைகளை பார்த்து தொடர்ச்சியாக பொருட்களை வாங்குவது என்பதுல ஒருவிதமான மனநோயாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை, கட்டாய ஷாப்பிங் கோளாறு எனும், 'ஒனியோமேனியா, என மருத்துவத்தில் அழைக்கின்றனர்.

இதிலிருந்து விடுபட இதோ சில சிம்பிள் வழிகள்!


வளைதளங்களை பிளாக் செய்யுங்கள்


உங்கள் மொபைல் போனில் இருக்கும், ஆன்லைன் ஷாப்பிங் 'ஆப்'களை முதலில் 'அன்இன்ஸ்டால்' செய்யுங்கள். மொபைல்போன், லேப்டாப்புகளில் நீங்கள் பயன்படுத்திய ஷாப்பிங் வலைதளங்களை 'பிளாக் சைட்' ஆப்ஷன் மூலம் 'பிளாக்' செய்யுங்கள்.


பணத்தை கண்காணியுங்கள்


பெரும்பாலானோர் தாங்கள் செலவு செய்வதை கண்காணிப்பதில்லை. இன்று முதல் நீங்கள் செலவு செய்யும், ஒவ்வொரு ரூபாயையும் கண்காணிக்க துவங்குங்கள். இதன் மூலம், எதற்காக அதிக பணம் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை தெரிந்து கொண்டாலே, தேவையற்றதை எளிதாக குறைத்து விடலாம்.


கிரெடிட் கார்டு வேண்டாம்


கிரெடிட் கார்டு எனும் மாயை, நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள விடுவதில்லை. ஆன்லைன் ஷாப்பிங் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடும் வரை, பணத்தை பயன்படுத்த பழகுங்கள். இது, நீங்கள் எப்போது, எவ்வளவு செய்கிறீர்கள் என்பதை உணர்த்தும். தேவையற்ற செலவை குறைக்கும்.


நிதி இலக்குகளை நிர்ணயிக்கவும்


சில நிதி சேமிப்பு இலக்குகளை, அமைத்துக்கொள்ளுங்கள். அவசர செலவு முதல் விடுமுறை சுற்றுலா வரை, எந்த வகை சேமிப்பாகவும் இருக்கலாம். இது போன்ற சேமிப்பு இலக்குகள், தேவையில்லாமல் பணம் செலவழிப்பதை குறைக்கும். சேமிப்பிற்கும், விரயத்திற்கும் இடையோன வேறுபாடு, இயற்கையாகவே உங்களை ஷாப்பிங் மீதான ஆர்வத்தை குறைக்கும்.


உறவுகளுக்கு பாதிப்பு


எந்தவொரு போதையிலிருந்தும் விடுபட, அதற்கு ஆரோக்கியமான மாற்றை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஷாப்பிங்கை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது உறவுகள். தொடர்ச்சியாக ஆன்லைன் ஷாப்பிங்கில் மூழ்கி கிடப்பது, கடன் வாங்கி ஷாப்பிங் செய்வது, உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தொடர்புபடுத்துங்கள். சில சமயம் தனியாக பிரச்னைகளை சமாளிக்க முடியாது. ஷாப்பிங் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது கடினம் எனில், தயங்காமல் உங்கள் அன்புக்குரியவர்களிடம் உதவி, ஆலோசனை கேட்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X