இந்திய நிகழ்வுகள்
தொடரும் புரளி
நொய்டா: உத்தர பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத், கான்பூர், அலகாபாத் ஆகிய நகரங்களின் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு இடங்களில், வெடிகுண்டுகள் இருப்பதாக, மர்ம நபர்கள் புரளியை ஏற்படுத்துகின்றனர். புரளி கிளப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விதவை பாலியல் பலாத்காரம்
மஹோபா: உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்ட கிராமத்தில், 50 வயது விதவை பெண்ணை, அகிலேஷ் அஹிர்வார் என்பவர், வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். இதில் கர்ப்பமான அந்த பெண் கொடுத்த புகாரின்படி, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.,வுக்கு சிறைபுதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன், 2016ல், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பார்தி தலைமையில், ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, சோம்நாத் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
வங்கி மோசடி வழக்கு மேலும் இருவர் கைது
மும்பை,மஹாராஷ்டிராவின் பி.எம்.சி., வங்கியில், 4,300 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

டிராக்டர்கள் மோதல்: 17 பேர் படுகாயம்
ஹாசன்; வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர், மற்றொரு டிராக்டர் மீது மோதியதில், அதிலிருந்த, 16 பேர் படுகாயமடைந்தனர்.ஹாசன் மாவட்டம், ஹரிகரே அருகில், கரும்பு தோட்டத்துக்கு, 16 கூலியாட்களுடன் டிராக்டர் சென்று கொண்டிருந்தது.அப்போது, எதிரே வைக்கோல் ஏற்றிக் கொண்டு, மற்றொரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், எதிரே கூலி ஆட்களை ஏற்றி வந்தல டிராக்டர் மீது மோதி கவிழ்ந்தது.இதில், 16 பேர் படுகாயமடைந்து, ஹன்சபி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் அனைவரும், கொப்பால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.காகினலே போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழக நிகழ்வுகள்
ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் மறியல்
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் மீன்பிடி உரிமை பெற்று தரக் கோரி ராமேஸ்வரம் அருகே இறந்த மீனவர் உடலுடன் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.
ஊரணியில் விழுந்து பெண் தற்கொலை
திருவாடானை : திருவாடானை அருகே ஆண்டாவூரணியை சேர்ந்தவர் ஆரோக்கியசெலின் 33. இவரது கணவர் பாலு 35. இருவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியசெலினுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதால் மனநிலை பாதிக்கபட்ட அவர், நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணிக்கு அக்கிராமத்தில் உள்ள ஊரணியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜன.,18ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மெசியா, சாம், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து, படகை மூழ்கடித்தனர். 4 மீனவர்களையும்இலங்கை வீரர்கள் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தனர் என தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.நேற்று இலங்கையில் பிரேத பரிசோதனை செய்த பின் நம் கடலோர காவல் படை பாதுகாப்புடன் விசைப்படகில் 4 பேரின் உடல் கோட்டைபட்டினம் கடற்கரை வந்தது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் கொண்டு வரப்பட்ட சாம், நாகராஜ், செந்தில்குமார் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
துறைமுகத்தில் தீ: ரூ 3 லட்சம் சேதம்
கடலுார் : கடலுார், முதுநகர் மீன்பிடி துறைமுகம் அருகே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மர்மமான முறையில் எரிந்து சேதமானது.
கொள்ளை போன ரூ 10 கோடி நகை மீட்பு;7 பேர் கைதுஓசூர் : ஓசூரில், முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து, துப்பாக்கி முனையில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த, ஏழு பேர் கும்பலை, தெலுங்கானா மாநில போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள் மற்றும் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாலையோரம் நின்றிருந்த டாரஸ் லாரியில் தீ
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நின்ற, 'டாரஸ்' லாரி, மின் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்து எரிந்தது.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கணபதி, 55, நேற்று காலை, வேலுாரில் இருந்து, டாரஸ் லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி, சென்னைக்கு சென்றார். அங்கிருந்து, வேலுார் திரும்பும்போது, காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் அருகில், மதியம், 1:15 மணிக்கு சாலை ஓரம் லாரியை நிறுத்தி,டீ குடிக்க சென்றார்.சிறிது நேரத்தில், லாரியின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்த ஓட்டுனர், காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வாகனம் வருவதற்குள், லாரியின் முன்பக்கம் முழுதும் எரிந்துவிட்டது
ராயப்பேட்டையில் 30 பவுன் நகை கொள்ளை
ஐஸ்ஹவுஸ் ; கால் டாக்சி ஓட்டுனர் வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகை மற்றும் பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.சென்னை, ராயப்பேட்டை, கோயா அருணகிரி தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா, 40; கால் டாக்சி ஓட்டுனர். இவர், ஏல சீட்டும் நடத்தி வருகிறார்.இரண்டு நாட்களுக்கு முன், கோடம்பாக்கத்தில் உள்ள இவரது மாமியார் இறந்ததால், குடும்பத்துடன் சென்றார். முகமது அப்துல்லாவின் மகன் சையது ஆஷிப், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 30 சவரன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை அருகே கடலில் மூழ்கிய கப்பல்: 7 பேர் கைது
சென்னை:லட்சத்தீவு அருகே, கடலில் தத்தளித்த, துாத்துக்குடியைச் சேர்ந்த, சரக்கு கப்பல் குழுவினர் ஏழு பேரை, இந்திய கடலோர காவல் படையினர், பாதுகாப்பாக மீட்டனர்.
கடலோர காவல் படையின் செய்திக்குறிப்பு:துாத்துக்குடியில் இருந்து, 19ம் தேதி, லட்சத்தீவு அருகே உள்ள கவரட்டி என்ற துறைமுகத்திற்கு, சரக்கு கப்பல் புறப்பட்டுள்ளது. இந்தக்கப்பலில், ஏழு பேர் பயணித்துள்ளனர். கப்பல், லட்சத்தீவு அருகே, நேற்று காலை, 5:00 மணியளவில் சென்றபோது, கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து, மூழ்கத் துவங்கியது.
இதையடுத்து, கப்பலின் உரிமையாளருக்கு, அந்த குழுவினர் தகவல் அளிக்க, அவர் துறைமுக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். துறைமுக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கல்பேணி துறைமுகத்திற்குள் செல்ல, அந்த கப்பலை அறிவுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE