அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பேச்சில் பா.ஜ., வளர்ச்சி: ஐ.டி., அணி தேசிய தலைவர் பேச்சு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்தது, காங்கிரஸ் - தி.மு.க., அரசு. தடையை நீக்கியது, பா.ஜ., அரசு,'' என, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு, தேசிய தலைவர் அமித் மாள்வியா தெரிவித்தார்.தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில மாநாடு, சென்னை, அரும்பாக்கத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் நிர்மல்குமார் தலைமை வகித்தார். மாநாட்டில், பா.ஜ., தகவல்

சென்னை:''தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்தது, காங்கிரஸ் - தி.மு.க., அரசு. தடையை நீக்கியது, பா.ஜ., அரசு,'' என, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு, தேசிய தலைவர் அமித் மாள்வியா தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில மாநாடு, சென்னை, அரும்பாக்கத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் நிர்மல்குமார் தலைமை வகித்தார். மாநாட்டில், பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு, தேசிய தலைவர் அமித் மாள்வியா பேசியதாவது:பிரதமர் உட்பட பா.ஜ., தலைவர்கள் அனைவரும், தமிழின் பெருமை, தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்,'தமிழகத்தில் தாமரை மலராது' என கூறி வருகிறார். அவர் தன் பேச்சை, பா.ஜ.,வில் துவங்கி, பா.ஜ.,வில் முடிக்கிறார். இதிலிருந்தே, மாநிலத்தில் பா.ஜ., வளர்ச்சியை அறியலாம்.சில ஆண்டுகளுக்கு முன்,தமிழகம் வந்தபோது இருந்த நிலைக்கும், தற்போதுள்ள தமிழகத்திலும், பல மாற்றங்களை காண்கிறேன்.

பா.ஜ., வளர்ச்சி அடைந்துள்ளது. விரைவில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக வரும். இலங்கையில், 50 ஆயிரம்தமிழ் குடும்பங்களுக்கு, மத்திய அரசு சார்பில், வீடு கட்டி கொடுக்கப் பட்டு உள்ளது. பிரதமராக மோடி வந்த பின், மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம்,தமிழின் பெருமைகளை எடுத்துக் கூறி வருகிறார்.

ஒரு தலைவர், சில நாட்கள் அரசியல் செய்வார்; சில நாட்கள், விடுமுறையில் சென்று விடுவார். அவர், கோவையில் பேசுகையில், 'பிரதமருக்கு தமிழ் கலாசாரம், தமிழ் மொழி குறித்து தெரியாது' என, கூறியிருக்கிறார்.ஆனால், ஒவ்வொரு இடத்திலும், தமிழக மக்களின் கலாசாரம், மொழி குறித்து, பிரதமர் பேசி உள்ளார்.

காங்கிரஸ், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஜல்லிக்கட்டை தடை செய்தனர். அந்த அரசில், தி.மு.க., அங்கம் வகித்தது. மத்திய பா.ஜ., அரசு, தடையை நீக்கியது. தமிழகத்தின் பெருமையை காக்க, பா.ஜ., என்றும் துணை நிற்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேசியதாவது:சமூக ஊடங்களில், பா.ஜ., கருத்துக்கு, மற்ற கட்சிகளை பதில் கூற வைத்துள்ளோம். சமூக ஊடகப் பிரிவில் உள்ள ஒவ்வொருவரும், நிருபர்கள். நாம் எழுதுவது தான், 'டிரெண்ட்' ஆகும். ஒவ்வொருவரும் நம் கருத்துக்களை, ஆணித்தரமாக, சமூக வலைதளங்களில் பதிய வைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

நம் கட்சியின் முகநுால் பக்கத்தில் போடும் பதிவுகளுக்கு, எதிரிகள் போலி முகநுால் கணக்கில் இருந்து, எதிர்ப்பு கருத்துக்களை பதிவிடுகின்றனர். அவர்களின் தவறான கருத்துக்களுக்கு, நாம் பதிலடி கொடுக்க வேண்டும். நம் பதிவுகளை, மற்றவர்களுக்கு அதிகம் பகிர வேண்டும். இவ்வாறு, முருகன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X