பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் குடியரசு தின விழா பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Added : ஜன 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'சென்னையில், 26ம் தேதி நடக்க உள்ள, குடியரசு தின விழாவிற்கு, பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.சென்னை மெரினா கடற்கரையில், தமிழக அரசு சார்பில், ஜன., 26ல், குடியரசு தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை, 8:00 மணிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தேசியக் கொடியேற்ற உள்ளார்.ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின நிகழ்ச்சியில்,

சென்னை:'சென்னையில், 26ம் தேதி நடக்க உள்ள, குடியரசு தின விழாவிற்கு, பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், தமிழக அரசு சார்பில், ஜன., 26ல், குடியரசு தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை, 8:00 மணிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தேசியக் கொடியேற்ற உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.கொரோனா தொற்றால் நிலவும், அசாதாரண சூழ்நிலையை கருத்தில் வைத்து, இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் நிகழ்த்தும், கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

மாவட்டம் தோறும் சுதந்திரப் போராட்ட வீரர் களின் வீடுகளுக்கே அதிகாரிகள் சென்று, பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளிக்க, கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை, 'டிவி' மற்றும் ரேடியோவில், நேரடியாக ஒளி, ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள், மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்கவும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
24-ஜன-202108:17:13 IST Report Abuse
Raman குடியரசு தின விழா யாருக்காக விடுறாங்க? அரசியல்வாதிக்கா ? அரசாங்க அதிகாரிகளுக்கா ? வெளிநாட்டுக்காரனுக்கா? அப்புறம் எல்லா வருஷமும் நீங்க மட்டுமே கொண்டாடுங்க அப்புறம் எதுக்கு பொதுமக்கள். ? அதனால் தான் மக்களுக்கு நாட்டு பற்று குறைத்துக்கொண்டு வருது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X