பொது செய்தி

தமிழ்நாடு

'பாலித்தீன்' கவர்களுக்கு மாற்றாக பேப்பர் கவர் வந்தாச்சு!

Added : ஜன 24, 2021
Share
Advertisement
உலகளவில் அதிகமான 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளை கொண்ட நாடுகளில், இந்தியா, மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அதிலும், 2016க்கு பின், 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் வரவு அதிகம்.தங்களுடைய புதுமையான யோசனைகளை 'ஸ்டார்ட் அப்' கம்பெனியாக மாற்றுவதற்கு பலரும் மெனக்கெடுகின்றனர். அதற்கான வெற்றியை பெற கடுமையாக உழைக்கின்றனர்.அவ்வகையில், ஒரு புதுமையான யோசனை, எவ்வாறு, வணிக வடிவமாக மாறியது

உலகளவில் அதிகமான 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளை கொண்ட நாடுகளில், இந்தியா, மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அதிலும், 2016க்கு பின், 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் வரவு அதிகம்.தங்களுடைய புதுமையான யோசனைகளை 'ஸ்டார்ட் அப்' கம்பெனியாக மாற்றுவதற்கு பலரும் மெனக்கெடுகின்றனர்.

அதற்கான வெற்றியை பெற கடுமையாக உழைக்கின்றனர்.அவ்வகையில், ஒரு புதுமையான யோசனை, எவ்வாறு, வணிக வடிவமாக மாறியது என்பதை பார்க்கலாம். சாதாரணமாக ஒரு ஓட்டலுக்கு சென்று பார்சல் வாங்கும்போது, சாம்பார், சட்னி, டீ, காபி ஆகியவை கட்டி தரும் விதத்தை பார்த்தால், இன்னும் சிறப்பாக இருக்கலாமே என்று நினைக்க தோன்றும்.

தமிழக அரசு தடை விதித்தும் கூட, பல கடைகளில் இன்னும் 'பாலித்தீன் பைகள்' தான் உபயோகிக்கின்றனர். 'ஆன்லைன்' புக்கிங் வந்தபின், 'அலுமினியம் பாயில்' பைகள் உபயோகமும் அதிகமாகி விட்டது. இவ்விதமான பைகள் மக்குவதற்கு ஏறத்தாழ, 60 முதல், 100 ஆண்டுகள் ஆகும் என்பது, பயமாகவும் இருக்கிறது.

கோவாவை சேர்ந்த சச்சின் கங்காதரன் என்ற இளைஞரால் ஆரம்பிக்கப்பட்ட 'லா பேப்ரிக்கா கிராப்ட்' (La Fabrica Craft) என்ற ஒரு 'ஸ்டார்ட் அப்' கம்பெனி, இதுபோன்ற திரவ வடிவ பொருளை 'பார்சல்' கட்ட 'பேப்பர் பை' ஒன்றை தயாரித்திருக்கிறது.இவ்வகை பைகள், 2 நாள் வரை ஒழுகாமல் இருக்கிறது என்றால் ஆச்சரியமே. சாதாரணமாக இது போன்ற திரவ வடிவ பொருளை 'பேக்' செய்ய உதவும் 'பேக்கேஜிங்', எளிதில் மக்கும் வகையில் இருக்காது.

ஆனால், இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனி கண்டுபிடித்திருக்கும் பைகள் மக்கும் தன்மை உள்ளவை.இந்த பைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகித கூழ் அல்லது பருத்தி, கோதுமை உமி அல்லது பிற கரிம பொருள்களிலிருந்து பெறப்பட்ட 'என்சைம்'களால் தயாரிக்கப்படுகிறது. அதன்பின், இந்த காகிதம், சுய உதவிக்குழுக்கள் மற்றும் உள்ளூர்வாசிகளால் ஒரு பையாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

கசிவு இல்லாமல் இருப்பதற்காக, இந்த காகிதத்தின் மேல் பாலி லாக்டிக் ஆசிட் (பி.எல்.ஏ.,) லேயர் கொடுக்கப்படுகிறது. இது சோளம் அல்லது மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து பெறப்பட்ட பாலிமர் ஆகும். 250 பை கொண்ட ஒரு கிலோ, 250 முதல், 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இணையதளம்: https://www.lafabricacraft.com/சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் எண்: 98204-51259, இணைய தளம்: www.startupand businessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X